Friday, April 13, 2007

நிகழ்காலப் பயணியொருத்தியின் நாட்குறிப்பு

அல்லது அதனையொத்த ஏதோவொன்று..!

எனை மாற்றிக் கொண்டிருக்கிறாய்.... நீ.
எனக்கே தெரியாமல்...
கொஞ்சங் கொஞ்சமாய்.., மிக மிக இயல்பாய்.
பிடிக்கவில்லை எனக்கு.. ஒரு சிறிதும் பிடிக்கவில்லை..
நானாயிருந்த 'என்' னின் தோல்வியைக் காணச் சகிக்கவில்லை.
அச்சம் மேலிடுகிறது... மனது பதைபதைக்கிறது...
வேறெந்த சந்தர்ப்பத்திலும் இத்தனை பரிதாபமாய் என் சுயம் தோற்கடிக்கப்பட்டதில்லை.
உனைப்போல் வேறெவரும் என் உயிரள்ளிப் போனதுமில்லை.


அது ஒரு மழைநாள் தானில்லையா... இல்லை.., இல்லாமலிருந்திருக்க முடியாது. உன் வருகை எந்த முன்னறிவித்தல்களுமின்றி நிகழ்ந்திருக்கச் சாத்தியமில்லை. எனக்குப் புரியாமலிருந்திருக்கக்கூடும். எதுதான் புரிந்திருக்கிறது.. எனக்கு? 'உயிர்த்த நிலமும், துளிர்த்த மரங்களும் பறைசாற்றத் தவறியிருக்கலாம்'. ஆனால் வருணன் எனை வஞ்சித்துப்போக வாய்ப்பில்லை. அதுவொரு மழைநாளாகத்தானிருந்திருக்க வேண்டும். இடியும், மின்னலும் தமக்கேயான மொழியில் உன் வருகையைச் சொல்லிச் சென்றிருந்திருக்கக்கூடும். எனக்குத்தான் புரியவில்லை. சராசரி சலித்துப்போன மழைக்கால மாலைகளுள் ஒன்றாய் அன்றைய பொழுதையும் கருதி, நான் அலட்சியப்படுத்தியிருந்திருப்பேன்.

wasn't that a romantic rainy day... as these silly poets describe...? there have never been any romantic moments in my life... how could it be possible without mutual respect... or even understanding? but, things have never been the same since you came into my life.

அதுவொரு வெள்ளிக்கிழமை. எப்படி மறப்பேன்.., நான்? வெள்ளியன்றுதான் பிறந்ததாலோ என்னமோ, நல்லது நடக்குமானால் எல்லாமே வெள்ளிக்கிழமைதான் நடக்குமென்ற ஒரு அசட்டு நம்பிக்கை ஆழ வேரூன்றியிருந்தது... சிறுபராயந்தொட்டே. வெள்ளியென்றால் ஏனோ அப்படிப் பிரியம் எனக்கு. நம்பிக்கைகள் அவ்வளவு இலகுவில் பொய்த்துப் போவதில்லையென்பதை உணர்வதற்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வந்து வாய்த்தது.., உன் வருகையினூடு. கடந்து போன அந்த நாட்களை நினைக்கையில் ஏனோவோர் பிரகாசம் நிறைந்த புன்னகை நிறைக்கிறது.., முகத்தையும் மனத்தையும்.

my days were so blue... and especially, the rainy days were so painful... i don't know why... but they usually make me cry. i was not quite sure of what's going to be or what am i going to do in the future. those days, love seemed like a myth... a very popular myth. i have never dreamt of a day which i would lose myself in someone else's arms. i was a self - reliant girl.. so as i am today.. who loves herself more than anything in the world. but yet, my arms were stretched in need of love, care and comfort. i was waiting with stretched arms for a long time... waiting for someone who loves me.. not for who i am.. but for what i am.

when i felt that someone is trying to hold my arms tightly... suddenly i realized that the time has come to love and to be loved.

இன்னமும் அழுகிப்போகாத ஆன்மாவொன்றின் அவலக் குரல்களைக் கேட்டிருக்கிறாயா நீ எப்போதாவது..? மழைக்கால மாலைகளில்.., மனம் எங்கோ அலைபாய்கையில்.., காளான்களாய் முளைக்கும் உன்னைப் பற்றியதான நினைவுகளுடன்... தவிர்க்கவே முடியாத உன் அருகாமைக்கான ஏக்கங்களுடன் ஆன்மாவொன்று பாடலிசைப்பது உன் செவியை வந்தடைந்திருக்கிறதா எப்போதாவது..?

விண்மீன்களைத் தொலைத்த நாளொன்றில் வெண்மதி அறியக்கூடும் என் வேதனைகளை.., நிலவும் கரைந்த அமாவாசையிரவில் வானம் உணரக்கூடும் என் வெறுமைகளை. அலறுகிறது அடிமனம்.., அருகில் நீயில்லாமல் போனதில்.

உணர்தல்களுக்கு அப்பாற்பட்ட அநாகத நாதங்களிலிருந்து பொறுக்கியெடுக்க முயல்கிறேன் உனக்கான ஸ்வரங்களை... என்னுள் கரைந்தொழுகி.., கசிந்துருகி.. கருக்கொண்டு உயிர்த்தெழுகிறது உனக்கான ஒரு இராகம்.

கரைசேரா அலைகளின் காணாமற்போன இரைச்சல்களிலிருந்தும்... மலைச்சாரல்களின்வழி காற்று விட்டுச்சென்ற தடயங்களிலிருந்தும்... வானத்தின் விளிம்புகளினூடு கசிந்து கொண்டேயிருக்கும் மர்ம அதிர்வுகளிலிருந்தும் கண்டெடுத்த அமானுஷ்யங்களின் மொழியில்... எனதேயெனதான மொழியில் பாடிக்கொண்டேயிருக்கிறது ஆன்மா.., உன்னைப் பற்றியதோர் பாடலை.

தலைமுறைகளைத் தொலைத்த இனக்குழுமங்களும்... அழிந்துபோன மாயாவும், மெசபத்தேமியாவும்... தைகிரீஸ் - யூப்ரடீஸ் தமக்குள் புதைத்துக்கொண்ட மானுடத்தின் மகோன்னதங்களும் எமக்காக எதையேனும் விட்டுச்சென்றிருக்கவும்கூடும்... எங்கோ வெகுதொலைவில் எம் வருகைக்காக அவை காத்திருக்கவும்கூடும்.., என்றாவதொருநாள் உயிர்ப்பிக்கப்படுவோமென்ற நம்பிக்கையுடன்.

பாரோ மன்னர்களின் அறியப்படாத அதிசயங்களினூடு... நீரோக்களின் அலட்சியங்களினூடு... இன்னமும் எஞ்சியிருக்கின்ற எமக்கான படிமங்களைத் தேடியெடுக்க முயல்கிறேன். வரலாற்று நாயகர்களின் வாள்முனைகளின் கூர்மையில் உனது வீரியத்தினை அடையாளங்காண முனைகிறேன்.

காடுகள் இரம்மியமாய்.. இருளாய் ஆழப்பரந்து, விரிந்தபடி காத்திருக்கின்றன.. வரையறைகளைக் கடப்போம் நாம்.. வளையங்களை அறுத்தெறிவோம்.. நீ நீயாக.. நான் நானாக.

12 comments:

butterfly Surya said...

நல்ல பதிவு..

வாழ்த்துக்கள்..

சூர்யா
துபாய்
butterflysurya@gmail.com

நிவேதா/Yalini said...

வருகைக்கு நன்றி, சூர்யா..

Arun Appadurai said...

/*எனை மாற்றிக் கொண்டிருக்கிறாய்.... நீ.
எனக்கே தெரியாமல்...
கொஞ்சங் கொஞ்சமாய்.., மிக மிக இயல்பாய்.
பிடிக்கவில்லை எனக்கு.. ஒரு சிறிதும் பிடிக்கவில்லை..
நானாயிருந்த 'என்' னின் தோல்வியைக் காணச் சகிக்கவில்லை.
அச்சம் மேலிடுகிறது... மனது பதைபதைக்கிறது...
வேறெந்த சந்தர்ப்பத்திலும் இத்தனை பரிதாபமாய் என் சுயம் தோற்கடிக்கப்பட்டதில்லை.
உனைப்போல் வேறெவரும் என் உயிரள்ளிப் போனதுமில்லை.*/

முழுக்க முழுக்க உண்மையான வார்த்தைகள்! பார்த்தும் கேட்டும் புளித்துப் போன 'சினிமாத்தனமான' உணர்வுகளிலிருந்து வேறுபட்டு உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடி போல:) படித்தபொழுதே இதமாக மனதை வருடுவது போல் இருந்தது!! தொடர்ந்து எழுதுங்கள்:))

நிவேதா/Yalini said...

பின்னூட்டத்துக்கு நன்றி, அருண்!

Anonymous said...

நன்றாய் இருந்தது கவிதை

ஒரு மழைநாளில் அடர்ந்த மரங்கள் நிறைந்த சாலையில் நடந்து போவது போன்ற உணர்வை தந்தது உங்கள் கவிதை

நன்றி

செல்வநாயகி said...

///காடுகள் இரம்மியமாய்.. இருளாய் ஆழப்பரந்து, விரிந்தபடி காத்திருக்கின்றன.. வரையறைகளைக் கடப்போம் நாம்.. வளையங்களை அறுத்தெறிவோம்.. நீ நீயாக.. நான் நானாக.////


arumai.

நிவேதா/Yalini said...

இராஜராஜன், செல்வநாயகி.. பின்னூட்டங்களுக்கு நன்றி!

Anonymous said...

என்னமோ நடக்குது ஒண்ணுமாய் புரியலை

கறுப்பி said...

Good One!

நிவேதா/Yalini said...

சின்னப் பெடியங்களுக்கு இதெல்லாம் புரியாதுதான் துவாரகன்..:-)))

நன்றி, கறுப்பி..

செல்வநாயகிக்குக் குறிப்பிட மறந்தது..,

//வரையறைகளைக் கடப்போம் நாம்.. //

நீங்கள் எடுத்துக்காட்டியுள்ள இவ்வரிகள் ஆழியாளின் கவிவரிகளின் தாக்கமெனத்தான் சொல்ல வேண்டும்..

Anonymous said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான ஒரு மன நிலையில் உங்கள் பக்கத்தோடு இணைகிறேன். உங்கள் எழுத்துக்கள் இன்னும் ஒருவகை நெடும் நெடும் சம்பவங்களைக் கிளர்த்திப் போடுகிறது....இயல்பாயும் இருக்கிறது.

இது என் முதல்ப் பின்னூட்டமாயிருக்க வேண்டும் உங்கள் பக்கத்துக்காக, பல தடவை படித்துவிட்டு பாராட்டியிருக்கிறேன், பஞ்சியோ என்னமோ எழுத வரவில்லை. இப்போததன் மன நிலை எழுதத் தூண்டியது. வாழ்த்துக்கள்.

நிலா. லோகநாதன்.

nila said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான ஒரு மன நிலையில் உங்கள் பக்கத்தோடு இணைகிறேன். உங்கள் எழுத்துக்கள் இன்னும் ஒருவகை நெடும் நெடும் சம்பவங்களைக் கிளர்த்திப் போடுகிறது....இயல்பாயும் இருக்கிறது.

இது என் முதல்ப் பின்னூட்டமாயிருக்க வேண்டும் உங்கள் பக்கத்துக்காக, பல தடவை படித்துவிட்டு பாராட்டியிருக்கிறேன், பஞ்சியோ என்னமோ எழுத வரவில்லை. இப்போததன் மன நிலை எழுதத் தூண்டியது. வாழ்த்துக்கள்.

நிலா. லோகநாதன்.