எல்லாம் சரியாய் அமைதியாய்
அழகாய்த்தானிருக்கின்றன..
சுயத்தினை நோக்கிய தேடல்களும்,
உள்ளார்ந்த தொலைதல்களும்
என்றும் சுவாரசியமானவைதான்..,
தடுத்து நிறுத்தி
எதிர்க் கேள்வி கேட்க
எவரும் முன்வராத வரையிலும்.
தெருவில் தற்செயலாய்க்
கடந்து போகுமொரு சைக்கிள்,
அநிச்சையாய் எதிர்கொள்ளுமொரு
பாடசாலைச் சிறுவன்,
போதிமரம் தேவைப்படுவதில்லை...
இவை போதும்
எனக்கும்,
தூசி படர்ந்த மூலைக்குள்
மீளாத் துயில்கொள்ளும்
என் புத்தருக்கும்..
நான் வாழ விரும்புகிறேன்
அவர்கள் அனைவருக்கும் மத்தியில்,
என் சுயம்
காணாமல் போயினும்,
அடையாளம் தொலைப்பினும்..
அனைத்தையும் ஏற்றுக்கொண்டு..,
மரண பயத்தினையும் கூட..
மனிதர்களை என் நேசத்துக்குரியவர்கள்..,
வேறெதனையும் விட..
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
"மானுட நேயம் நோக்கிய வாழ்வை படைத்திட முயல்கையில் எத்தனை தடைகள்.. கொடூரம் மிகுந்த விழிகள் தொட வாழ்தலில் கசப்பு நெஞ்சை நெருடும்.. மனிதம் மறந்து சவமாய்க் கிடந்து வாழ்தலில் எனக்குப் பிரியமேயில்லை.. நன்றி:- செல்வி"
செல்வி கவிதைகள் படித்துள்ளீர்களா நானும் படித்துள்ளேன் அவரை பற்றி ஏதேனும் தெறிந்தால் செல்லுங்களேன்
நன்றி
தேடலில் தொலைந்து போனவர்களும், நிலைத்து நிற்பவர்களும் எளிதாய் புரிந்து கொள்ளும் அரிய கவிதை.
மென்மேலும் எழுதுங்கள்.
இராஜராஜன், காட்டாறு.. பின்னூட்டங்களுக்கு நன்றி!
ஆமாம், செல்வி கவிதைகள் படித்துள்ளேன்.. ஒருவித வலி கலந்த குரலில் சமூகத்தை நோக்கி அவர் விமர்சனம் முன்வைக்கும் விதம் மனதை மிகவும் நெகிழ்த்துவது.. சில நாட்களுக்கு முன், நாடகமேடையொன்றில் செல்வியின் கவிதையொன்றை சொல்ல நேர்ந்தபோது உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டுப் போனேனென்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்..
ஆகா என்று சிறு குழந்தை போல கைகோட்டி மகிழ வைத்தது இக் கவிதை..ஆழமான அர்த்தமும், நடையும் மிக்க அருமை! உங்களது முந்தைய பதிவுகளின் வேகம் இல்லாவிட்டாலும், விவேகமான வரிகள்:)..வாழ்த்துக்கள்!!:)
நன்றி அருண்..
நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் வருகை கண்டதில் மகிழ்ச்சி..
என் முதல் வருகை..
அருமை..
வாழ்த்துக்கள்.
சூர்யா
துபாய்
butterflysurya@gmail.com
வருகைக்கு நன்றி, சூர்யா..
அன்பு நிவேதா
வாழ்த்துக்கள்.
இது என் முதல் வருகை.
உங்கள் கவிதையில் ஒவ்வொரு பத்தியும் தனித்தனி கவிதையாகவே எனக்கு தோன்றுகிறது.
உதாரணமாக:
எல்லாம் சரியாய் அமைதியாய்
அழகாய்த்தானிருக்கின்றன..
சுயத்தினை நோக்கிய தேடல்களும்,
உள்ளார்ந்த தொலைதல்களும்
என்றும் சுவாரசியமானவைதான்..,
தடுத்து நிறுத்தி
எதிர்க் கேள்வி கேட்க
எவரும் முன்வராத வரையிலும்.
இது போலவே அடுத்த பத்திகளும்.
மொத்தமாக பார்க்கையிலும் வலி தெரிகிறது.
வாழ்த்துக்கள்.
பின்னூட்டத்துக்கு நன்றி, மஞ்சூர் ராசா!
Ithamaana kavithai...Vaazhuthukkal Nivedha....!!
குட் ஒன்!
வணக்கம் நிவேதா,
ஏற்கனவே பலமுறை வந்திருந்-தாலும் முதல் முறை பின்னூட்டமிடுகிறேன்.
//தெருவில் தற்செயலாய்க்
கடந்து போகுமொரு சைக்கிள்,
அநிச்சையாய் எதிர்கொள்ளுமொரு
பாடசாலைச் சிறுவன்,
போதிமரம் தேவைப்படுவதில்லை...//
//மனிதர்களை என் நேசத்துக்குரியவர்கள்..,
வேறெதனையும் விட.. //
மனிதத்தை உணர்த்தும் இந்த வரிகள் எனக்குள் ஏர்படுத்திட தாக்கங்கள் பல பல. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
Post a Comment