Monday, October 15, 2007

பிரதிகளை மீளப் பதிதல் - 1

-The God of Small Things

1.

மிகவும் வசீகரித்த புத்தகமொன்றைப் பற்றி குறிப்பெழுதவென உட்காரும்போது எங்கிருந்து தொடங்குவதென்ற கேள்வியெழும். முதல் அத்தியாயத்திலிருந்து தொடங்க முடியாது. காரணம், இந்தக் கதை காலங்களுக்கிடையே முன்னும் பின்னுமாக மிக மிக வேகமாக நகர்ந்துகொண்டிருப்பது, சில அபாயகரமான இராட்டினங்களைப் போல.

அண்மையில், அவிசாவளையில் அமைந்திருக்கும் Leisure World க்கு தோழிகள் சிலர் போயிருந்தோம். Space Ship என்ற பெயரில் ஒரு இராட்டினம். விஷயம் தெரிந்தவர்கள் புத்திசாலித்தனமாக நழுவிக் கொண்டார்கள், தலைசுற்றுகிறதென்று. பெயருக்கேற்ற மாதிரி ஒரு கூண்டு. முழுக்க முழுக்க கம்பிகளால் அடைக்கப்பட்டு, போதாக்குறைக்கு இறுக்கமான சீட் பெல்ட்களுடன். இரண்டு கூண்டுகள். ஒன்று கீழேயிருக்கும். மற்றையது பனையளவு உயரத்தில் இதற்கு நேர்மேலே இருக்கும். ஒரு கூண்டில் நான்கு பேர் வீதம் (இருவர் இருவராக) ஒரே நேரத்தில் எட்டுப்பேர் பயணிக்கலாம். அந்தக் கூண்டு பூமியைப்போல தன்னைத்தானேயும் சுற்றும் (அப்படி சுற்றும்போது நாங்கள் தலைகீழாக இருப்போம் கூண்டுக்குள்), மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், முன்னுக்கும் பின்னுக்கும் சுற்றும்.

இருக்குமிடத்திலிருந்து மெதுவாக முன்னேறுவதைப் போலிருக்கும், திடீரென்று வேகமெடுத்து ஒரு உலுக்கு உலுக்கி திசைதிரும்பி மறுபடியும் வேகம் குறையும். அடுத்தகணம், ஒரே வீச்சில் பின்புறமாக சுழலத்தொடங்கும். இடம் வலம் மறந்து திசைகள் பற்றிய பிரக்ஞையற்று தலைசுழல அமர்ந்திருப்போம். அதே அனுபவம் இப்பிரதியை வாசிக்கும்போதும்.. நிகழ்காலத்தில் தொடங்கும் கதை, கடந்தகாலங்களுக்குச் சட்டென்று தாவி, நிகழ்காலத்துக்கும், கடந்தகாலத்தின் கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களுக்குமிடையே ஊடாடி மாறி மாறிப் பயணித்து, இறுதியாக கடந்தகாலத்தின் ஏதோவொரு புள்ளியில் சடுதியாக வந்து நின்றுவிடுகிறது.

அது அருந்ததி ரோயின், The God of Small Things.

2.
Once he was inside her, fear was derailed and biology took over. The cost of living climbed to unaffordable heights; though later Baby Kochamma would say it was a Small Price to Pay.
Was it?
Two lives. Two children's childhoods.
And a history lesson for future offenders.

(pg.318)

இறுதி அத்தியாயத்திலிருந்து தொடங்குவதுதான் மிகப் பொருத்தமாயிருக்கக்கூடும். சிறிய குடும்பம், சிறிய விடயங்கள், சிறிய தவறுகள்.. ஆனால், அவற்றுக்கு விலையாகக் கொடுக்க நேர்ந்ததோ, இரண்டு உயிர்களும், இரு குழந்தைகளின் குழந்தைமையும்.

Estha, Rahel - ஐந்து அல்லது ஆறு வயது நிரம்பிய (ஆண்,பெண்) இரட்டைக் குழந்தைகள், அவர்களது விவாகரத்துப் பெற்ற அம்மா மூவரையும் முக்கிய கதாபாத்திரங்களாகவும், கேரளாவின் Ayemenem எனும் ஊரைக் களமாகவும் கொண்டு நகர்கிறது கதை. இங்கு, The God of Small Things எனக் குறிப்பிடப்படும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அம்மாவுடன் தொடர்புவைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண்நண்பராகிய Velutha வும் முக்கிய இடம்பெறுகிறார். பிரதியைப் புறக்கணித்து, காலமாற்றங்களின் அகரவரிசைப்படி கதையைச் சுருக்கமாகக் கூறுவதானால்,

பரம்பரை பரம்பரையாக ஊரில் பேரும் புகழும் பெற்ற ஒரு கிறிஸ்தவக் (Syrian Christians) குடும்பம். அதில், கதையின்படி நான்காவது தலைமுறை அம்மாவும், Chacko வும். அம்மா சிறிய வயதிலேயே வீட்டை விட்டுப்போய் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் முடித்து கல்கத்தாவில் குடியேறுகிறார். அளவுமீறிய குடிப்பழக்கமுடைய கணவன், ஏதோவொரு தவறில் வேலையை இழக்கும் நிலைக்காளாகிறார். கணவரது மேலதிகாரி, அவரது அழகான மனைவியின் மீதுள்ள நெடுநாள் நாட்டத்தில் வேலை இழப்பைத் தவிர்ப்பதாயின் மனைவியைச் சிலகாலம் தன்னுடன் தங்க அனுமதிக்கும்படி யோசனை கூறுகிறார். கணவரும் இதே யோசனையை அம்மாவிடம் எடுத்துரைக்க, இயலாத கட்டத்தில் அம்மா விவாகரத்துப் பெற்று பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தன் பெற்றோரின் ஊருக்குத் திரும்பி வருகிறார். ஆண்குழந்தையை கணவரிடமே விட்டுவிட அம்மா விரும்பினாலும், பிள்ளைகள் எப்போதுமே தாயின் பொறுப்பாக (சட்டரீதியான குழந்தையாயிருந்தாலென்ன, சட்டத்துக்குப் புறம்பானதாயிருந்தாலென்ன) மட்டுமே கருதப்படுமொரு சமூகத்தில் அது இயலாததாகிவிடுகிறது.

அம்மாவின் அண்ணா Chacko, Oxford பல்கலைக்கழகத்தில் பட்டதாரிப் படிப்பு முடித்து, அங்கேயே ஆங்கிலேயப் பெண்ணொருவரையும் திருமணம் முடித்து, ஒரு பெண் குழந்தையும் பிறந்திருந்த நிலையில், மனைவி விவாகரத்து வேண்டிவிட ஊருக்குத் திரும்பி வந்து, தனது அம்மாவின் ஊறுகாய், மற்றும் பதப்படுத்திய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைப் (Paradise Pickles & Preserves) பொறுப்பேற்று நடத்துகிறார்.

அது கம்யூனிஸம் கேரளாவில் பரவத் தொடங்கியிருந்த காலகட்டம். Chacko நிறுவனமொன்றின் முதலாளியெனினும், Oxford காலத்திலிருந்தே கம்யூனிஸத்தின் தீவிர ஆதரவாளர். சாதி வேறுபாடுகளை மறுப்பவர் (ஆனால், தனது வீட்டுக்குள் தாழ்ந்த சாதியினரை அனுமதிக்க மாட்டாதது வேறுவிடயம்). பாட்டி, Baby Kochamma, வேலைசெய்யும் Kochu Maria உட்பட 7 பேரைக்கொண்ட குடும்பத்தில் நாட்கள் வெகு சாதாரணமாக நகர்ந்து கொண்டிருக்க, திடீர் திருப்பம் Chacko வின் ஆங்கிலேய மனைவி Margaret மற்றும் மகள் Sophie Mol வருகையுடன் நிகழ்கிறது. Margaret தனது இரண்டாவது கணவர் விபத்தொன்றில் இறந்ததையடுத்து, அதனை மறப்பதற்காகவும், கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழிக்கும் நோக்கிலும் மகளுடன் கேரளா வருகிறார். அவர்கள் வந்து சில வாரங்களில் அம்மாவுக்கும், தச்சுவேலை செய்துவரும் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த Velutha வுக்குமிடையிலான தொடர்பு வீட்டாருக்குத் தெரியவருவதுடன் (இது Velutha வின் மரணத்துக்கு வழிகோலுகிறது), எதிர்பாரா விபத்தொன்றில் Chacko வின் மகள் Sophie Mol இறக்கவும் நேரிடுகிறது. உயிருக்குயிராய் நேசித்திருந்த மகளை இழந்த Chacko வின் துயரம், ஒருவகையில் அம்மாதான் அதற்குக் காரணமென Baby Kochamma நம்பவைத்துவிட அம்மாவின் மீதான கோபமாக மாறி, அம்மாவையும் குழந்தைகளையும் வீட்டை விட்டுத் துரத்த வைத்துவிடுகிறது.

தொடர்வது, அழகிய குடும்பமொன்றின் சிதைவு. தம்மை ஒருவரிலிருந்து மற்றொருவரென வேறுபிரித்துப் பார்த்திராத, எப்போதும் நான், அவள்/ன் எனக் கருதாது 'நாம்' எனவே சிந்தித்துப் பழக்கப்பட்ட Estha வும், Rahel ம் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம். Estha அப்பாவிடம் கல்கத்தாவுக்கு அனுப்பப்படுகிறான். Rahel ஊரிலேயே தங்க அனுமதிக்கப்படுகிறாள். அம்மா வீட்டை விட்டு அனுப்பப்படுகிறார். குழந்தைகளைப் பராமரிக்கப் போதுமான ஊதியத்தைத் தரக்கூடிய வேலையொன்றை அம்மா பெற்றுக்கொண்டதன் பின்னர் அனைவரும் மறுபடியும் ஒன்றாக வாழலாமென்ற நம்பிக்கையுடன் மூன்றுபேரைக்கொண்ட அச்சிறிய அன்பால் பிணைக்கப்பட்ட குடும்பம் பிரிகிறது.

அவர்கள் மறுபடியும் இணைவதற்கான சந்தர்ப்பம் கிட்டுவதற்கு முன்னரே அம்மா - 31 வயதளவில்.. Not old. Not young. But a viable die-able age. இறந்துவிடுகிறார் (இறுதிவரை அப்படிப்பட்டதொரு வேலை அவருக்குக் கிடைக்கவேயில்லை, பாடசாலையொன்றை நடாத்த வேண்டுமென்ற அவரது கனவும் நிறைவேறவில்லை).

Rahel திருமணம் முடித்து அமெரிக்காவில் குடியேறுகிறாள். ஏறத்தாழ இருபது, இருபத்துமூன்று வருடங்கள் இப்படியே கடந்து போக, இவர்களின் அப்பா அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கு முன்னர், இனியும் தனது மகனைத் தன்னால் பராமரிக்க முடியாதெனக் கூறி திரும்ப ஊருக்கு அனுப்பி விடுகிறார். Estha ஊருக்கு வந்ததை அறிந்துகொண்ட Rahel (தற்போது கணவரை விட்டுப் பிரிந்தாயிற்று) அமெரிக்காவிலிருந்து ஊருக்குத் திரும்பி வந்து காலவோட்டத்தில் அசாதாரணமான முறையில் அமைதியாகிப்போன சகோதரனைக் காண்கிறாள். தற்போது அவர்கள் - two-egg twins - முற்றிலும் மாறுபட்டவர்கள், அவள் மீள்நிரப்பமுடியா வெறுமையுடனும், அவன் அசாதாரணமான அமைதியுடனும்.

இது சிக்கார்ந்த கதையின் மிக மிக எளிமையாக்கப்பட்ட சுருக்க வடிவம். உண்மையான பிரதி இப்படித் தொடங்கி, இதேபோல முடிவதல்ல; இது மட்டுமேயல்ல.


3.
வியக்க வைக்கும் அம்சம் பாத்திர வடிவமைப்பும் வர்ணனையும். ஒவ்வொரு மனிதரையும் செதுக்கியெடுத்திருக்கிறார் ரோய். அவர்களது தோற்றம், நடத்தை, சிந்தனைகளென்பன உருவத்துடன் மறுவிம்பமாக மனதில் விரியும் அதேவேளை உருவமற்ற எண்ணங்களின் அதிர்வுகளுக்கு வடிவங்கொடுத்தவாறும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அம்மாவின் கனவில் வந்த ஒற்றைக்கை மனிதனைப் பற்றிய விவரணையில்,

The God of Loss.
The God of Small Things.
The God of Goosebumps and Sudden Smiles.
He could do only one thing at a time.

If he touched her, he couldn't talk to her, if he loved her he couldn't leave, if he spoke he couldn't listen, if he fought he couldn't win.
(pg.312)


அம்மாவையும், சகோதரனையும் விட்டு விலகியிருந்த நாட்களில் Rahel பல பாடசாலைகளுக்கு தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிறாள். ஆசிரியையொருத்தியின் வாசலுக்கு வெளியே பசுமாட்டின் சாணத்தை பூக்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தமைக்காகவும், கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்திருந்தமைக்காகவும், மூத்த மாணவிகளுடன் முரண்பட்டமைக்காகவும், தலைமையாசிரியையால் கண்டிக்கப்படுகிறாள். காரணம் கேட்டபோது, தனது மார்புகள் நோகுமா என்பதைப் பரிசீலிப்பதற்காகவே அப்படிச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாள். கிறிஸ்தவ நிறுவனங்களைப் பொறுத்தவரை மார்புகளின் இருப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையாதலாலும், புகை பிடித்தமைக்காகவும், வகுப்பாசிரியையின் பொய்த் தலைமுடியை எரித்தமைக்காகவும் பாடசாலையை விட்டு விலக்கப்படுகிறாள்.

She remained free to make her own inquiries: into breasts and how much they hurt. Into false hair buns and how well they burned. Into life and how it ought to be lived.
(pg.18)


இருந்தபோதும், காலம் அவளை வெறுமையின் உறைவிடமாக மாற்றிவிடுகிறது. அமெரிக்காவிலிருந்து வளர்ந்த பெண்ணாக வெறுமையையும் கூடவே அழைத்துக்கொண்டு அவள் திரும்பி வருகையில், அவளது சகோதரன் Estha ஒரு கிழவனின் வாயுடன் கூடிய இளைஞனாக வாழ்ந்துகொண்டிருப்பதைக் காண்கிறாள்.

He carried inside him the memory of a young man with an old man's mouth. The memory of a swollen face and a smashed, upside-down smile. Of a spreading pool of clear liquid with a bare bulb reflected in it. Of a bloodshot eye that had opened, wandered and then fixed its gaze on him. Estha.
(pg.32)


காலமும், அனுபவங்களும், தொலைந்துவிட்ட குழந்தைமையும் அவர்களை அவ்விதம் மாற்றிவிட்டிருந்தன. The Quietness & The Emptiness.

அம்மாவின் உணர்வுகள் எடுத்துக்காட்டப்படும் விதமும் மிகச் சிறப்பானது. தன் குழந்தைகளின் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருந்த போதும், சமயங்களில் தனது உணர்வுகளை முன்னிலைப்படுத்துவதில் அவள் தயக்கம் காட்டவில்லை. பகல் கனவொன்றின் போது ஒற்றைக் கை மனிதனுடன் கடற்கரையோரத்தில் அவள் தனித்து அலைகிறாள், அந்தக் கனவில் தனது குழந்தைகளை விட்டு அவள் வெகுதூரம் விலகிவிட்டிருந்த போதும் அந்தக் கனவு மனிதனின் மீதான நேசத்தையும் விட்டுக்கொடுத்தாளில்லை. குழந்தைகள் அவளது வயிற்றின் பிரசவக் கோடுகளையும், தையல் தடங்களையும் தடவிக்கொடுத்து முத்தமிடுகையில்கூட அதை மூர்க்கமாகப் புறக்கணிக்கிறாள்.

Ammu grew tired of their proprietary handling of her. She wanted her body back. It was hers. She shrugged her children off the way a bitch shrugs off her pups when she'd had enough of them.
(pg.211)


இது அம்மாமாரின் மற்றும் தாய்மையின் புனிதம் பற்றி காலங்காலமாக நாம் கொண்டிருந்த கற்பிதங்களைத் தகர்த்தெறிவதாகவுள்ளது. தனது உடல் குறித்தான கரிசனை கொண்டவளாக Estha, Rahel ன் அம்மா சித்தரிக்கப்படுகிறாள்; ஒரு பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிடவும்படுகிறாள். அம்மாமாரைக் கடவுளரின் மறுவுருவமாகவல்லாது (தந்தைவழிச் சமூகத்தின் நலன்களைப் பேணுவதும், பெண்களின் கருப்பையைக் கட்டுப்படுத்துவதுமே இந்தக் கடவுளர் மயமாக்கலின் அடிப்படை நோக்கம்), சராசரி உணர்வுகளுடன் கூடிய மனுசியாக அணுகுமிந்தப் பார்வை இன்னமும் விரிவாக நோக்கப்பட வேண்டும். சட்டத்துக்குப் புறம்பான உறவு வீட்டாருக்குத் தெரியவந்து அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பொழுதில் நடந்தது புரியாமல் திகைத்து நிற்கும் குழந்தைகளைப் பார்த்து அவள் கத்துகிறாள்:

If it wasn't for you I wouldn't be here. None of this would have happened. I would have been free. I should have dumped you in an orphanage the day you were born. You're the millstones round my neck.
(pg.240)


அவளது இந்த வார்த்தைகள் வெளிப்படுத்தும் உணர்வே இங்கு முக்கியம் பெறுகிறது. நீங்களில்லாவிடில் இந்த இடத்தில் நானிருந்திருக்கவும் மாட்டேன்; இப்படியெல்லாம் அவமானப்பட்டிருந்திருக்கவும் மாட்டேன்; சுதந்திரமாக இருந்திருப்பேன் என்கிறாள். குழந்தைகளைப் பொக்கிஷமாகக் கருதும் எமது ideal தாய்மாருடன் ஒப்பிடுகையில் குழந்தைகளைச் சுமையெனத் திட்டும் இவளை எங்கே கொண்டுபோய் வைப்பது? ஆனால், யதார்த்தம் பெரும்பாலும் இப்படித்தானிருக்கிறது. குழந்தைகள் தாயின் பொறுப்பாக சுமத்தப்படுவது அவளது சுதந்திரத்துக்கான தடைக்கல்லாக அக்குழந்தைகளை மாற்றிவிடுகிறது. அதேயிடத்தில் ஆனானப்பட்ட தாய்மையின் 'புனிதம்' வெறும் myth ஆகிவிடுகிறது. But, she's the real woman.

4.

நாவலில் அதிகம் ரசிக்க வைப்பது அருந்ததி ரோயின் மொழிநடையும் கதை சொல்லும் பாணியும். சிறுவர்களின் உலகை மிக மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார் அல்லது வாழ்ந்து காட்டியுள்ளாரெனலாம். சமயங்களில், சிறுவர்களது சிந்தனை வியக்க வைப்பது. நாம் சற்றும் எதிர்பார்த்திராத அதிக கவனம் பெற்றிராத மிகச் சிறிய விடயங்கள் கூட சிறுவர்களால் மிக உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன. அவர்களுடன் பழகுவதை நாம் இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அவர்களது கேள்விகளுக்கு அலட்சியமாகப் பதில் சொல்கிறோம். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் எமக்கு பலதையும் கற்றுக் கொடுப்பவர்களாகவும், தம் சந்தேகங்களால் எம்மை அசைத்துவிடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது கேள்விகளை சிடுசிடுத்துக்கொண்டு புறக்கணிப்பதற்கு முக்கிய காரணம் அதற்கான பதில் எமக்குத் தெரிந்திராமைதான். சிறுவயதில் அத்துணை சாமர்த்தியசாலிகளாகவிருப்பவர்கள் வளர்ந்ததும் வெகு சாதாரண மனிதர்களாகி விடுகின்றமைக்கு அவர்களது அலட்சியத்துடன் எதிர்நோக்கப்பட்ட கேள்விகளும் பெரியவர்களது புறக்கணிப்புக்களுமே காரணமாகவிருக்கலாம். அல்லது 'சின்னத்தனங்களிலிருந்து' விடுபட்டு பெரியவர்களின் உலகுக்குள் நுழையும் பேரவாவில் தாமாகவே தமது சிந்தனையைச் சுருக்கிட்டுக் கொண்டதாகவும் கருதலாம். எம்மால், சிறுபிள்ளைத்தனங்கள் எனக்குறிப்பிடப்படுபவை உண்மையில் சிறுபிள்ளைத்தனமானவையா என்ற கேள்வியும் எழுகிறது.

Sopie Mol ஐ ரோய் இப்படி விபரிக்கிறார்,

The seeker of small wisdoms: Where do old birds go to die? Why don't dead ones fall like stones from the sky?
The harbinger of harsh reality: You're both whole wogs and I'm a half one.
The guru of gore: I've seen a man in an accident with his eyeball swinging on the end of a nerve, like a yo-yo
(pg.17)

மற்றையது, சில விடயங்களை அவர் எடுத்துச் சொல்லும் பாணி,

While other children of their age learned other things, Estha and Rahel learned how history negotiates its terms and collects its dues from those who break its laws. They heard its sickening thud. They smelled its smell and never forget it.
History's smell.
Like old roses on a breeze.
It would lurk forever in ordinary things. In coat hangers. Tomatoes. In the tar on roads. In certain colors. In the plates at a restaurant. In the absence of words. And the emptiness in eyes.
(pg.54)
வரலாற்றின் தன்மை, Estha, Rahel ன் அம்மா சமூகத்தின் (வரலாற்றின்) விதிகளை மீறியதை அந்தக் குழந்தைகள் உணரும் விதம்..

அவர்களது வாழ்வு இப்படித் தடம்புரண்டு போனமைக்கு Sopie Mol ன் வருகையும், அவள் இறந்தமையும்தான் காரணமென்பது வெறுமனவே ஒருபக்கத்தால் மட்டும் அவ்விடயத்தை அணுகுமொரு முறைதான். உண்மையில் இவையனைத்தும் இந்தக் கதை நடந்துகொண்டிருக்கும் காலப்பகுதிக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டிருந்தன.

That it really began in the days when the love laws were made. The laws that lay down who should be loved, and how. And how much.
(pg.33)


யார், எப்படி, எந்தளவு நேசிக்கப்பட வேண்டும் என்ற அன்பின் விதிகள் உருவாக்கப்பட்ட நாளிலிருந்தே இந்தப் பிரச்சனைகள் முளைவிடத் தொடங்கிவிட்டிருந்தன. அம்மா இந்த விதிகளை மீறினார். யார் யார் நேசிக்கப்படத் தகுந்தவர்களென்ற பட்டியலில் இடம்பெற்றிராத தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவரை அவர் நேசித்தார். அத்தகையவர்களை எப்படி நேசிக்கவேண்டுமென்ற விதிகளைக் கடந்து, எந்தளவு நேசிக்கவேண்டுமென்ற அளவு கடந்து எல்லைதாண்டி நேசித்தார். அவரது அந்த நேசம் அவரால் நேசிக்கப்பட்டவரின் உயிரையும், அவர் குழந்தைகளின் குழந்தைமையையும் விலையாகப் பெற்றுக்கொண்டது. ரோய் சொல்வது போல, however, for practical purposes, in a hopelessly practical world... (pg.34)

ஆண்குழந்தை Estha தியேட்டரொன்றில் வைத்து குளிர்பான விற்பனையாளனொருவனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்காளாக்கப்படுகிறான். அவ்விற்பனையாளனின் ஆணுறுப்பைக் கையில் பிடித்திருப்பதற்குப் பரிசாக குளிர்பானமொன்று அவனுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தான் துஷ்பிரயோகத்துக்காளாவது புரியும் வயதில் அவனில்லையெனினும், அந்த அருவருப்பு, அச்சம்பவம் அவனில் ஏற்படுத்திய தாக்கம், இது தெரியவந்தால் அம்மா தன்னை வெறுத்துவிடுவாரோ என்ற பயம் (குழந்தைகள் எப்போதும் தாம் நேசிக்கப்பட வேண்டுமென எதிர்பார்ப்பவர்கள்), அந்த மனிதனை மறுபடியுமொருமுறை சந்திக்க நேருமோ என்ற கலக்கம், அதேநேரம் தனது சகோதரியை அந்த மனிதனிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வு அனைத்துமிணைந்து வீட்டை விடப் பாதுகாப்பானதோர் இடத்தை ஆற்றுக்கு அப்பால் தேர்ந்தெடுக்க அவனை வழிநடத்துகின்றன. ஒருவகையில் இதுவே Sopie Mol ன் மரணத்துக்கும் காரணமாயமைகிறது. பிற்காலத்தில் அவனது ஆளுமையிலும் பாரிய மாற்றத்தையேற்படுத்துகிறது. சிறிய, சாதாரணமாகத் தோற்றமளிக்கின்ற விடயங்கள் எப்போதும் அதனையொத்த விளைவுகளை மட்டுமே தந்துவிடுவதில்லையென்பதை இது உணர்த்திச் செல்கிறது.

சமூகத்தில் ஆண்களையும் பெண்களையும் நடாத்தும் விதத்திலுள்ள பாரிய வேறுபாட்டையும் இந்நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது. விவாகரத்துப் பெற்றுக்கொண்ட Chacko வின் Men's needs னைப் புரிந்துகொண்ட அவரது அம்மா (மம்மாச்சி) பெண்கள் தொந்தரவின்றியும், யார் கண்ணிலும் படாமலும் அவரது அறைக்கு பின்புறமாக வந்து செல்லக்கூடியவாறு புதிய வாயிலொன்றையும் அமைக்கிறார். உணவுக்காகக் காத்திருக்கும் பிள்ளைகளையும், குடிகாரக் கணவன்மாரையும் கொண்ட தொழிற்சாலைப் பெண்கள் பணத்துக்காக தாராளமாக அங்கு வந்து போயினர். ஆனால், அதேவேளை அதேபோல விவாகரத்துப் பெற்ற அம்மாவின் Women's needs புரிந்து கொள்ளப்படாதது ஆச்சரியத்துக்குரியதே. அம்மாவுக்கும் வேலுதாவுக்குமிடையேயான தொடர்பு தெரியவந்ததும் சீறிப்பாயும் மம்மாச்சி அம்மாவை அறையொன்றினுள் அடைத்து வைக்குமளவு கோபம் கொண்டமையும், இது வெளியில் தெரியவந்தால் குடும்பத்தின் மானம் மரியாதை என்னாகுமென்று வருந்துவதும் கவனிக்கத்தக்கது. குடும்பத்திலுள்ள ஆண் என்ன செய்தாலும் தொலையாத மானமும், மரியாதையும் பெண் என்றவுடன் கண்காணாத் தொலைவுக்குப் பறந்து விடுகின்றன. இங்கு மறுபடியும் 'அன்பின் விதிகளின்' (யார் நேசிக்கப்பட வேண்டும், எப்படி & எந்தளவு) ஆட்டம் தொடங்குகிறது.


5.

கேரளாவில் அப்போது பரவிக்கொண்டிருந்த மார்க்ஸிஸம் மற்றும் பூகோளமயமாக்கலுக்கெதிரான வலிமையான விமர்சனம் நாவலினூடு முன்வைக்கப்படுகிறது. இந்தியாவின் வேறெந்தப் பாகத்தையும்விட கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகளவு பலம் பொருந்தியதாக விளங்கியமைக்கு அங்கு கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழ்ந்தமையையும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது. மார்க்ஸிஸத்தை கிறிஸ்தவத்துடன் ஒப்பிடும் ரோய் கிறிஸ்தவமும் மார்க்ஸியமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒத்த தன்மைகளைக் (similar characteristics) கொண்டிருப்பதனால், இந்துக்களை விட கிறிஸ்தவர்கள் அதில் அதிக ஈடுபாடு காட்டுவதற்கு வாய்ப்புண்டாகியிருக்கலாமென்கிறார்.

Marxism was a simple substitute for Christianity. Replace God with Marx, Satan with the bourgeoisie, Heaven with a classless society, the Church with the Party, and the form and the purpose of the journey remained similar. An obstacle race, with a prize at the end.
(pg.64)


ஆனாலும், இந்தக் கோட்பாட்டிலிருந்த குழப்பம் யாதெனில் கேரளாவின் சிரியன் கிறிஸ்தவர்கள் யாவரும் பெரும்பாலும் தோட்டங்கள், தொழிற்சாலைகளுக்குச் சொந்தக்காரர்களான நிலப்பிரபுக்களாகவே இருந்தமை; மரணத்தை விடப் பயங்கரமான விடயமாக கம்யூனிஸத்தைக் கருதும் இந்தக் கிறிஸ்தவர்கள் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்தும் வந்தமை. கேரளாவில் கல்வியறிவு உயர்நிலையில் காணப்பட்டமையும் கம்யூனிஸத்தின் பரவலுக்கு ஒரு காரணமாகக் கருதப்பட்டது. ஆனாலும் உண்மையில், சாதிப்பாகுபாடுகளுக்குள்ளான, மரபார்ந்த விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்ற சமூகத்தை ஒருபோதும் கேள்வி கேட்காத மறுசீரமைக்கும் அமைப்பாக மட்டுமே கம்யூனிஸம் கேரளாவில் அறிமுகமானதெனலாம். அதன் ஆதரவாளர்களும் சாதிப் பாகுபாடுகளுக்குட்பட்டே செயற்பட்டமையும் குறிப்பிடத்தகுந்தது.

The Marxists worked from within the communal divides, never challenging them, never appearing not to. They offered a cocktail revolution. A heady mix of Eastern Marxism and orthodox Hinduism, spiked with a shot of democracy.
(pg.64)

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக விளங்கிய நம்பூதிரிபாட் தேர்தல்களில் பங்குபெறுவதிலும், தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றுவதிலும் நம்பிக்கை கொண்டிருந்தமையும், அதன் விளைவாகக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டமையும், தீவிரவாதப் பிரிவினர் நக்ஸலைட்டுகளாகச் செயலாற்றத் தொடங்கியமையும் மேலும் கவனத்திற்கொள்ளத்தக்கன.

கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக (card holding member) இருந்த வேலுதாவின் மீது அம்மாவின் குடும்பத்தினர் பொய்யான குற்றப்பதிவு தாக்கல் செய்தபோது, தனிப்பட்ட விடயங்களில் தலையிட முடியாதென கட்சியும் அவனைக் கைவிட்டு விடுகிறது. இறுதியில் பொலிசாரினால் அடித்து நொறுக்கப்பட்டு இறக்கும் தறுவாயில், இதுவரைகாலமும் கடவுளாலும், வரலாற்றாலும் கைவிடப்பட்ட சாதியைச் சேர்ந்தவனை இப்போது மார்க்ஸும் கைவிட்டுவிட்டாரென்கிறார் ரோய்.

பூகோளமயமாக்கலின் விளைவுகளுக்குச் சிறந்த உதாரணமாக, கதைநிகழ் காலத்தைய Baby Kochamma வும், வேலைக்காரி Kochu Maria வும் திகழ்கின்றனர். செய்மதித் தொலைக்காட்சி மூலம் உலகத்தில் ஒளிபரப்பாகும் அத்தனை நிகழ்வுகளையும் நாள் முழுதும் அறைக்குள்ளிருந்தே கண்டுகளிப்பதுடன், அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டு இரு தடவை வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் இருவரும். Baby Kochamma தனது வீட்டிலிருக்கும் தளபாடங்கள் பொருட்கள் மீது அளவற்ற பிரியம் கொண்டவர்.அவரது மார்க்ஸிய - லெனினிஸம் மற்றும் புரட்சி பற்றிய பழைய பயங்கள், BBC யில் ஒளிபரப்பப்படும் வறுமை, யுத்தங்கள் பற்றிய செய்திகளால் மீள்வடிவம் பெறுகின்றன. வறுமையும், படுகொலைகளும் அவருக்குத் தனது வீட்டுத் தளபாடங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் விளைவிக்கும் காரணிகளாகவே தோற்றமளிக்கின்றன. எந்தக் கணத்திலும், தொலைக்காட்சியில் தென்படும் யாரேனுமோர் வறியவன் தனது பொருட்களைத் திருடிக்கொண்டு விடலாமென்ற பயத்தில் யன்னல்களைக் கூட எப்போதும் மூடியே வைக்கிறார். மெய்மறந்து தொலைக்காட்சியை இரசிக்கும் நேரங்களில் Baby Kochamma வும், வேலைக்காரி Kochu Maria வும் ஒரே கிண்ணத்திலிருந்து வேர்க்கடலையை அள்ளியெடுத்து வாய்க்குள் போட்டுக்கொள்வது, பூகோளமயமாக்கமும், செய்மதித் தொலைக்காட்சி நிகழ்வுகளும் அந்தப் பழைய வீட்டிலும் சமத்துவத்தைக் கொண்டுவந்து விட்டனவெனக் கிண்டல் தொனியுடன் குறிப்பிடப்படுகிறது.

சுருக்கமாகக் கூறுவதாயின், அருந்ததி ரோயின் இந்த நாவல், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததும், தன்னால் போற்றப்பட முடியாததுமானவற்றை அழிப்பதற்கு மனிதருக்குள்ள தீராத ஆவலை எடுத்து விளம்புவதாகவுள்ளது.

Feelings of contempt born of inchocate, unacknowledged fear - civilization's fear of nature, men's fear of women, power's fear of powerlessness.
Man's subliminal urge to destroy what he could neither subdue nor deify.
Men's Needs.

(pg.292)


இங்கு விலையாகக் கொடுக்கப்பட்டவை (மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கு மீள்கிறோம்):

இரு குழந்தைகளின் குழந்தைமை
பெண்ணின் நேசம்
மற்றும், The God of Small Things


வரலாற்றின் விதிகளை மீறுபவர்களுக்கு இது மிகச் சாதாரணமான தண்டனையாக/ விலையாகத் தோன்றலாம்.
ஆனால்..,
நிச்சயமாக அது சாதாரணமானது தானா??


(நன்றி:- புத்தகத்தை அன்பளித்த தோழனுக்கு...)

29 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நண்ப(பி?),
இப்பொழுதுதான் உங்கள் வலைப்பக்கம் பார்த்தேன்.
இப் பின்னூட்டம் இந்த பதிவைப் பற்றியது அல்ல;ஏனெனில் ஆயாசப் படுத்தும் ராய் போன்றவர்களில் எழுத்துக்களில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை..
வலைத்திட்டின் தலைப்பு தான் என்னை இங்கு எழுதத் தூண்டியது.
பின்னர் உங்கள் முதல் பதிவுக்குப் போய்ப் பார்த்தேன்,நிச்சயம் பெயருக்கு ஒரு விளக்கம் அங்கு இருக்கும் என நினைத்து.
இருந்தது...
மோஹனத்தைப் போல மென் ரசனைகள் உங்கள் எழுத்தில் இருக்கலாம் எனத் தோன்றுகிறது..

Anonymous said...

நிவேதா, விரிவான பகிர்தலுக்கு நன்றி.
.....
நீண்டகாலமாய் இந்நூலை வாசிக்க ஆரம்பிப்பதும், பிறகு இடைநடுவில் விடுவதும், பிறகு தொடகத்திலிருந்து வாசிக்க ஆரம்பிப்பதுமாய் ஒரு நூறு பக்கங்களுக்கு அப்பால் தாண்டமுடியாமல் இன்னும் நிற்கின்றேன். ஆரம்பத்தில் வாசிக்க சிக்கலாயிருந்தாலும், சுவாரசியத்தின் இழை பிடிபட அண்மையில் வாசித்து முடித்த மார்க்வெஸ்ஸின், Of Love and Other Demons போல இப்புதினத்தையும் ஒருநாள் வாசித்து விடாமலா போய்விடுவேன் :-).
.....
அருந்ததி ரோயின் இந்நூல் வெளிவந்தபோது மரபார்ந்த மார்க்சியர்களால் வைக்கப்பட்ட விமர்சனங்களை, இன்றைய அருந்ததி ரோயின் செயற்பாடுகள் எள்ளி நகையாடிக்கொண்டிருக்கின்றன என்றுதான் கூறவேண்டும். மார்க்சியத்திற்கெதிராய் அருந்ததி ரோய் மட்டுமில்லை - அண்மையில் நமது ஈழ மரபு மார்க்சியர் ஒருவரின் நூல முகவுரையை வாசித்தபோது - எஸ்.வி.ஆரையும், அ.மார்க்ஸையும் அவர் மார்க்சியத்தின் எதிரிகளாக கட்டமைக்க பட்டபாடுகளை நினைக்கச் சிரிப்புத்தான் வந்தது. இன்றைய அ.மார்க்சும், எஸ்.வி.ஆரும் எந்தச் சித்தாந்தங்களோடு நெருங்கி நின்று செயற்பாட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்று விளங்கியபின்னாவது தனது விமர்சனங்களை மீளப்பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஒரு அருந்ததி ரோய் எழுதுவதற்கும், ஒரு ஜெயமோகன் எழுதுவதற்கான 'வித்தியாசங்களை' புரிந்துகொள்ளாமல் மரபு மார்க்சியர்கள் இவை இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும் 'அரசியலை' என்னவென்பது? அண்மையில் கூட அருந்ததி ரோய் தெல்காவில் (?) ஒரு பேட்டி கொடுத்திருப்பார் (தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வந்ததாய் நினைவு). அதில் எவ்வளவு தெளிவாய் மார்க்சிசம் பற்றிய புரிதல்களை முன்வைத்திருக்கின்றார் என்று பாருங்கள். நக்சலைட்டுக்களை 'தேசவிரோதிகளாய்க்காட்ட' நேர்காணல் கண்டவர் மிகுந்த பிரயத்தனப்பட்டாலும், அதை ரோய் எவ்வளவு அழகாய் உடைத்தெறிகின்றார் என்பது வாசிக்கும்போது புலப்படும். மார்க்சிசத்தை பின் நவீனத்துவ வாசிப்பினூடாக ரோய் புரிந்துகொண்டு உரையாடமுயல்கின்றார் என்று எழுதினால், மேலும் 'பட்டங்கள்' கிடைக்கும் என்பதால்...இத்தோடு நிறுத்திக்கொள்கின்றேன். நன்றி.

Anonymous said...

மேலே குறிப்பிட்ட அருந்ததி ரோயின் நேர்காணல் இதுதான்:
http://www.tehelka.com/story_main28.asp?filename=Ne310307Its_outright_CS.asp

Anonymous said...

Nivedha, excellent description, compelling me to complete the book. thanks this is inspiring

Anonymous said...

இன்றுள்ள செயல்வாதிகளில் அருந்ததிராய் முன்னிலையில் இருக்கிறார். அவரது எழுத்துக்கும் செயலுக்குமான இடைவெளி அற்று இருப்பதால் அவரை எனக்கு நிரம்பப் பிடிக்கிறது. அவரைப் போல எனக்குப் பிடித்த இன்னொருவர் மஹாஸ்வேதாதேவி. அவருடைய நாவலான Mother of 1084 ஐ வாசிக்கக் கிடைக்ககவில்லை. ஆனால் அந்நாவலை அடிப்படையாக வைத்து கோவிந் நிஹாலின் எடுத்த அதேபெயரிலான திரைப்படத்தை நிகரி திரைப்பட வட்டத்தினர் அவர்களுடைய மாதாந்த திரைப்பட நிகழ்வில் திரையிட்ட போது பார்க்கக் கிடைத்தது.மார்க்சியத்தை வெறுமனே வரட்டுத்தனதாகப் பாவிப்பதை விட்டுவிட்டு இயங்கியல் புரிதலுடன் இவர்கள் அணுகுவது எனக்குப் பிடித்திருக்கிறது. அது போல இலக்கியம் என்பது வெறுமனே எழுதிக்கொண்டிருப்பது என்பதற்கு அப்பாலானது அவர்களுடைய புரிதல். ஒரு நேர்காணலில் மேற்கத்தைய பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் அருந்ததி ராயிடம் கேட்கிறார் உங்களுடைய அடுத்த நாவல் எப்போதென்று. எங்களுடைய எழுத்தாளர்கள் படைப்பாளிகள் வலைப்பதிவர்கள் என்றால் என்ன பதில் சொல்லி இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள். ஆனால் அவர் இனி நாவல் எழுதும் திட்டமே இல்லை என்று விடுகிறார். டி.சே. உங்களுக்கு மறதி அதிகமோ அல்லது வயதாகிறதோ தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்ட அருந்ததி ராயின் நேர்காணல் மொழிபெயர்ப்பு காலச்சுவடு யூன் மாத இதழில் வெளியானது.

Anonymous said...

டி.சே. அருந்ததி ராயின் மார்க்சியத்துக்கும் அ.மார்க்சின் மார்க்சியத்திற்கும் இடையே நிறைய வேறுபாடுண்டு. இருவரையும் ஒன்றாக்க வேண்டாமே. அ.மார்க்சினுடையது பின்நவீனத்துவப் பார்வை என்று அவரும் பிறரும் சொல்கிறார்கள். ஆனால் அருந்ததிராய் தன்னுடைய பார்வை பின்நவீனத்துவப் பார்வை என்று எங்கும் சொன்னதாகத் தெரியவில்லை. நீங்கள் ஏன் அவரை ஒரு பட்டியில் அடைக்கப் பார்க்கிறீர்கள். அது உங்களுக்கு உதவும் என்ற காரணத்தாலா?

நிவேதா/Yalini said...

அறிவன்,

பின்னூட்டத்துக்கு நன்றி, ஆர்வமில்லாதபோதும் வந்து எழுதியமைக்கும்..

டிசே,

பின்னூட்டத்துக்கும், அருந்ததியின் நேர்காணலுக்கான சுட்டியை வழங்கியமைக்கும் நன்றி. இந்நூலை விரைவாக வாசித்து முடிக்க வாழ்த்துக்கள்.

//மார்க்சிசத்தை பின் நவீனத்துவ வாசிப்பினூடாக ரோய் புரிந்துகொண்டு உரையாடமுயல்கின்றார் என்று எழுதினால், மேலும் 'பட்டங்கள்' கிடைக்கும் என்பதால்...//

புரிகிறது.. புரிகிறது..;-)))

பின்னூட்டத்துக்கு நன்றி, சந்திரா!

மது,

மஹாஸ்வேதாதேவியின் சிறுகதைகள் அதிகம் பிடிக்கும். அவரது வார்த்தைகள் படு கூர்மையானவை. Mother of 1084... பார்த்தது நினைவுக்கு வருகிறது. படமே அவ்வளவு அருமையாகவிருந்தால், நாவல் எப்படியிருக்கும்.. கொழும்பில் எங்கேயெடுக்க முடியுமென தெரிந்தால் தயவுசெய்து அறியத் தருவீர்களா..? உம்பர்த்தோ ஈகோ வின் Foucault's Pendulum, The Name of the Rose ஐயும் தேடிக்கொண்டிருக்கிறேன் (ரமேஷ்-பிரேம் கட்டுரையும் கட்டுக்கதையும் நூலில் சிலாகித்து எழுதியதை வாசித்ததிலிருந்து..:-)) நூலகத்தில் ஈகோவின் Baudolino மட்டும்தான் கிடைத்தது. The Name of the Rose DVD வாங்கி படம் பார்த்துவிட்டால் வாசிப்பதில் ஆர்வம் போய்விடுமென புத்தகத்தை வாசித்த பிறகு பார்ப்போமென்று நினைத்தபடி எடுத்து வைத்தால் அது பறிபோய்விட்டது இப்போது..:-((

இருந்தாலும், டிசேயின் வயது குறித்து இவ்வளவு கவலைப்பட்டிருக்க வேண்டியதில்லை. சில விடயங்களை அக்குவேறு ஆணிவேறாக நினைவு வைத்திருக்க முடியாதில்லையா..:-)

ரசிகன் said...

என்னவோ போங்க.. இன்னும் உங்கள போல அழமா ரசிக்கரவங்க இருக்காங்கங்கரது சந்தோஷமாதே.. இருக்கு..

Anonymous said...

கீர்த்தனன்,
/அருந்ததி ராயின் மார்க்சியத்துக்கும் அ.மார்க்சின் மார்க்சியத்திற்கும் இடையே நிறைய வேறுபாடுண்டு. இருவரையும் ஒன்றாக்க வேண்டாமே. /
எங்கே ஒன்றாக்கினேன்? அ.மார்க்ஸோ, அருந்ததி ரோயோ அமைப்புக்குள் இயங்காது, ஆனால் அமைப்பின் பல்வேறு செயற்பாடுகளோடு ஊடாடியபடியும், விமர்சித்தபடியும் இருக்கின்றார்கள் என்றே சுட்டிக்காட்டினேன். நான் குறிப்பிட்டவர்களான அ.மார்க்சும், எஸ்.வி.ஆர் இருவரும் கூட பல விடயங்களில் எதிரெதிரான விமர்சனங்களுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிவீர்களென நினைக்கின்றேன். மற்றபடி, அருந்ததி ரோயினதோ, அ.மார்க்சினதோ, எஸ்.வி.ஆரினதோ பார்வைகள் ஒரே நேர்கோட்டில் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்று எங்கே நான் கூறினேன்? இதே உதாரணத்திற்கு அ.மார்க்சிற்குப் பதிலாய் சார்த்தாரை மாற்றீடாக வைத்துக்கூடப்பார்க்கலாம்.. உடனேயே சார்த்தாரிற்கும், அருந்ததி ரோயிற்கும் நிறைய 'வித்தியாசங்கள்' இருப்பதாய் கூறுவீர்களோ தெரியாது. ஒவ்வொருவரின் 'வித்தியாசங்களை'ப் புரிந்துகொள்ளாமல், பின் நவீனம் என்ற புள்ளிக்குள் முதற்காலடிகூட எடுத்துவைக்கமுடியாது. இங்கே அ.மார்க்ஸ் என்ற ஒரு ஆணும், அருந்ததி ரோய் என்ற பெண்ணும் பார்க்கின்ற பார்வைகளுக்குமிடையிலேயே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதே எளிதாகப் புரியும்போது, எப்படி ஒரு சட்டிக்குள் அவர்கள் இருவரையும் சாம்பராக்குவது? மேலே நிவேதா - ஒரு பெண் என்ற ரீதியில் God of Small Things வாசிப்பினூடாக முன்வைக்கும் அவதானங்கள் பல ஒரு ஆணின் பார்வையில் தவறவிடப்படக்கூடியதாய் (அல்லது அவசியமற்றதாய்) போய்விடக்கூடும் என்பதையும் நான் அறிவேன்.
.....
/ அருந்ததிராய் தன்னுடைய பார்வை பின்நவீனத்துவப் பார்வை என்று எங்கும் சொன்னதாகத் தெரியவில்லை. நீங்கள் ஏன் அவரை ஒரு பட்டியில் அடைக்கப் பார்க்கிறீர்கள். அது உங்களுக்கு உதவும் என்ற காரணத்தாலா?/
அருந்ததி ரோய் கூறவில்லைத்தான். ஆனால் அவரின் ஆக்கங்களை ஒரளவு வாசித்தவன் என்றவகையில் என் அவதானத்தை முன்வைத்தேன். வாசிக்கும் ஒருவர் தான் விரும்பியரீதியில் பார்க்கும் சுதந்திரத்தைத் தருவதும், பிரதியை எழுதியவர் அதை மறுப்பதென்றால் கூட ஒரு வாசகராக நின்றே அதை மறுக்கக்கூடிய வெளியையும் தருவது எதுவென்றால்.. அது கூட. xxxxx) அருந்ததி ரோய் வறட்டு மார்க்க்சியம் பேசிக்கொண்டிராமல், உள்ளடங்காதவராய் ஆனால் மார்க்சியத்திற்கு மிக அண்மையாக இயங்கிக்கொண்டிருக்கின்றார் என்பதற்காகவே, அவரது வாசிப்பு/எழுத்து முறை பின் நவீனத்துவததிற்கூடாக வரக்கூடியது அல்லது ஒத்திசையக்கூடியது என்றே விளங்கிக்கொண்டேன் (நீங்கள் அருந்ததிரோயை உங்களது வாசிப்பினூடாக எப்படி விளங்கிக்கொள்கின்றீர்கள் என்பதையும் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கின்றேன்).பின் நவீனத்துவ லேபிற்காய் எவரும் எந்தப்பிரதியும் எழுதவில்லை/எழுதப்படவில்லை. பிறகே அப்பிரதிகள் அவ்வாறு பார்க்கப்பட்டன் (தமிழில் மட்டுந்தான் எம்.ஜி.சுரேஷ் லேபிள் போட்டு எழுதுவார்). மற்றபடி நான் அருந்ததி ரோயை பட்டியலடைக்கவோ, எனக்கு எதிர்காலத்தில் உதவுமொன்றோ (நானென்ன சொத்தா சேகரிக்கின்றேன்?) அப்படிச்சொல்லவில்லை. எனது பின் நவீனத்துவப் புரிதல்களே ஆரம்பப் புள்ளிகளில்தான் நிற்கின்றன என்றுதானே எனது பதிலொன்றில் எழுதியிருக்கின்றேன். சார்த்தரையும் இருத்தலியத்தையும் ஒரளவு விள்ங்கிக்கொள்ளவே தனக்கு பத்துவருடங்களுக்கு மேலாய் ஆனது என்று எஸ்.வி.ஆர் (பார்க்க, சார்த்தார்: விடுதலையின் பாதை) கூறும்போது சில வருடங்களில் பின் நவீனத்துவத்தைப் புரிந்துகொண்டு அதை சொத்தாக சுவீகரிக்கப்போகின்றேன் என்றால் முலைப்பால குடித்த ஞானசம்பந்தனாய்த்தான் நானிருக்கவேண்டும். நன்றி.

Anonymous said...

நிவேதா,

Mother of 1084 வை நானும் பல இடங்களில் தேடி விட்டேன். ஓரிடமும் கிடைக்கவில்லை. நிகரி திரைப்பட வட்டத்தைச் சேர்ந்த சிவகுமாரிடம் தான் கேட்டுப் பார்க்க வேண்டும். அவர் எங்கிருந்து தான் எடுக்கிறாரோ தெரியவில்லை. அவர்களின் திரையிடல்களில் நான் பார்த்த பல படங்களை பின்னர் கொழும்பின் பல இடங்களில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. உதாரணமாக Two Women, Lumumba, MalcomX, Born of the Brothels என்று பல படங்கள் எடுப்பதற்குச் சிரமமாக இருக்கிறது.

மற்றது டி.சேயின் வயது பற்றிக் கவலைப்படக் காரணமுண்டு. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான ஆளுமையும், திறமையும் இருப்பதாக நம்புபவன் நான். அதபோல் அவரவரது பங்களிப்பு என்ற ஒன்றும் உண்டு. பத்திரிகை சஞ்சிகைகளுக்கும் இது பொருந்தும். ஒவ்வொரு சஞ்சிகைக்கும் ஒவ்வொரு விதமான பங்களிப்பு இருக்கிறது. அவற்றின் கருத்துக்களுடன் நாம் உடன்படலாம். முரண்படலாம். ஆனால், அதனது வகிபாகத்தை நாம் மறுக்க முடியாதல்லவா? காலச்சுவடுவுடன் எனக்கும் பல விடயங்களில் உடன்பாடின்மைகள் உண்டு. ஆனால் அதன் பங்களிப்பை மறுதலிப்பது சரியானதாக இருக்காதல்லவா? பலருக்கு காலச்சுவடுவுடன் ஒரு 'தீண்டாமை' கண்ணோட்டம் இருக்கிறது. எனவே அதற்கு எங்காவது compliment கிடைக்க வேண்டிய நேரத்தில் அதன் பெயர் மறந்து விடும். காலச்சுவடு பற்றி மட்டுமல்ல, உண்மையான செயலாளிகள் பலரும் மறந்து போகப்படுவதும், மறைக்கப்படுவதும் ஒன்றும் புதிதல்ல. எனக்கு இப்படிப் பல சம்பவங்கள் தெரியும்.

மறைந்த சு.வில்வரத்தினம் நல்ல கவிஞர் என்பதில் எனக்கு மாறுபாடான கருத்து இல்லை. வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது எங்கள் கவிஞர்கள் பலரது கவிமனம் பொங்கியெழவில்லை. வில்வரத்தினத்தினது கவிமனமும் அதில் ஒன்று. அது எப்போது பொங்கி எழுந்ததென்றால் புலிகளே தாம் வெளியேற்றியது தவறு என்று சொன்ன பின்னர் தான். ஆனால் அதற்கு முன்னரே அது பற்றி எழுதியும் பேசியும் வந்தவர்களுடைய வகிபாகம் முக்கியமானதல்லவா? ஆனால் வில்வரத்தினத்தினுடைய பல பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பற்றி ஒரு குறிப்புத் தானும் கிடைப்பதில்லை. ஒரு முறை நானே இது பற்றி நேரடியாகக் கேட்ட போது அவர் 'எனக்கு அவற்றை குறித்துக் காட்டிப் பேச நூல்களோ சஞ்சிகைகளோ கிடைப்பதில்லை என்றார். சரி பெயரைத் தன்னும் குறிப்பிட்டிருக்கலாமல்லவா என்று கேட்ட போது அந்தந்த நேரத்திலை எல்லாம் ஞாபகத்திற்கு வருகுதில்லை. வயது போய்விட்டது, மறந்து போகுதடாப்பா என்றார். இந்த மறத்தலின் அரசியலை எப்படிப் புரிந்து கொள்வது?

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

//பின் நவீனத்துவ லேபிற்காய் எவரும் எந்தப்பிரதியும் எழுதவில்லை/எழுதப்படவில்லை. பிறகே அப்பிரதிகள் அவ்வாறு பார்க்கப்பட்டன் (தமிழில் மட்டுந்தான் எம்.ஜி.சுரேஷ் லேபிள் போட்டு எழுதுவார்).//

என்ன இப்பிடிச் சொல்லீட்டீங்க டிசே, இங்க அந்த லேபிள வச்சுக்கொண்டு எத்தனை இலக்கிய அச்சுறுத்தல்கள் நடந்திருக்கு... 'பின்னவீனத்துவப் பிரதி'யெண்டு வாசகரப் பயமுறுத்தப் பாத்தவயளுக்கு முரண்வெளியில பதிலளிக்கப்பட்ட கதையெல்லாம் நடந்த்ததெல்லோ? தவிரவும், விதப்புக்கும் மதிப்புக்குமுரிய பிரதியாளர்களான பிரேம்-ரமேஷ் உடைய 'பேச்சு மறுபேச்சு' தொகுப்பும் 'பின்னவீனத்துவம் நோக்கி' என்ற அடையாளப்படுத்தலோட தானே வந்துச்சுது? (அதுவொரு காலகட்டத்த இல்லாட்டி 'நிலவரத்த'ச் சுட்டுறதுக்கான பிரயோகம் என்று கருதுறது தகும் எண்டாலும் கூட கவன ஈர்ப்புக்கான ஒரு விளம்பர வாசகம் போலவும் இருக்கு)


//அதை மறுக்கக்கூடிய வெளியையும் தருவது எதுவென்றால்.. அது கூட. xxxxx)//

ஒரு கெட்ட வார்த்தயைப்போல புள்ளி இடைவெளிகளால குறிக்கிற அளவுக்கு, பின்னவீனத்துவத்தால புண்பட்டுட்டீங்க போல..? நீங்க குறிப்பிடுற நேர்காணலில அருந்த்ததி ரோய் 'f' word ஐ உபயோகப்படுத்துற தருணத்தில தான் புள்ளி இடைவெளிகள் விடப்பட்டிருக்கு.. ;‍))

//- அண்மையில் நமது ஈழ மரபு மார்க்சியர் ஒருவரின் நூல முகவுரையை வாசித்தபோது -//

'பின்னவீனத்துவம்: மாயைகளைக் கட்டவிழ்த்தல்' நூலுக்கு நுஃமான் எழுதின முகவுரையக் குறிப்பிடுறீங்க எண்டு நினைக்கிறன்... சரியா?

Anonymous said...

மது,
காலச்சுவடை 'தீட்டு' என ஒதுக்கிவைக்கவில்லை. முன்னட்டை கிழிந்த அம்பையின் நேர்காணலோடு நான் முதன்முதலில் வாசித்த காலச்சுவட்டையும் இப்போதைய காலச்சுவட்டையும் பார்க்கும் பார்வைகள் வித்தியாசமானது என்றாலும், இன்னும் காலச்சுவட்டை வாசித்துக்கொண்டுதானிருக்கின்றேன்..எனது வலைத்தளமான (http://www.padamkadal.blogspot.com) அநேகமான ஆக்கங்கள் காலச்சுவடிலிருந்து நன்றியுடன் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றது. காலச்சுவடு, உயிர்மை (திண்ணை இணையத்தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்) போன்றவற்றில் ஒவ்வாமை இருப்பினும், காலச்சுவட்டிலோ அல்லது உயிர்மையிலோ வாசித்தேன் என்றுதான் பலவிடங்களில் குறிப்பிட்டு எழுதியுமிருக்கின்றேன். நேற்றுக்கூட தமிழ்மணத்தினூடாக ஒரு பதிவை வாசிக்கும்போது மாயவாதியின் அண்மைய வெற்றிகுறித்து அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரை தீராநதியிலா, புதியபார்வையிலா அல்லது கீற்று தளத்திலிருக்கும் ஏதாவது சஞ்சிகையிலா வாசித்தேன் என்ற குழப்பத்தில் அந்தப்பதிவில் பின்னூட்டம் எழுத விரும்பியும் எழுதாமல் வந்திருந்தேன். பிழையாக ஒரு இடத்தைக் குறிப்பிட்டு பிறரைக் குழப்புவதை விட, 'எங்கையோ வாசித்தேன்' என்கிறபோது இன்னொருவர் வந்து -உங்களைப் போல- சான்றோடு எழுதமுடிவது நல்லதுதானே. மற்றப்படி எனக்கு என்று ஒரு அரசியல் உண்டு. அதில் காலச்சுவடில் எழுதுவதில்லை என்பதிலிருந்து, தமிழ்நாட்டில் எனது தொகுப்பை பிற நண்பர்களுக்கும், சில இதழ்களுக்கும் அனுப்பியபோதுகூட காலச்சுவடிற்கு (இரவிக்குமார் தவிர்த்து)அனுப்பக்கூடாதென்றே தமிழகத்திலிருக்கும் நண்பருக்கு தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றேன் (குளத்தோடு கோபித்துக்கொண்டு... என்று நீங்களோ அல்லது வேறு யாராவது குறிப்பிட்டாலும் கூட). நாளை கூட்டு/கூட்டணிகள் மாறலாம். 'புதுமை பித்தமும் பிரமிள் சித்தமும்'ல் பொதியவெற்பன்(?), இரவிக்குமாரையும் வேல்சாமியையும் அறச்சீற்றத்தோடு விமர்சிப்பதுபோல நாளை என் 'அரசியல்' மாறும்போது/மாறினால் எவரேனும் வந்து என்னைக் கேள்விகேட்கட்டும் என்பதற்காய் ஒரு குறிப்பாய் இங்கே இதை எழுதுகின்றேன்.
...............
சு.வில்வரத்தின்ம பற்றி நீங்கள் குறிப்பிடுவது பற்றி எனக்கு அவ்வளவாய்த் தெரியாது; உங்களைப் போல நெருங்கிப் பழகியதுமில்லை.ஆனால் எனக்குத் தெரிந்த நண்பர்களில் சிலர் -மறத்தலின் அரசியல் இல்லாமல்- எழுதியவர்களை மறந்து எழுதப்பட்ட விடயங்களை நினைவில் வைத்திருக்கின்றார்கள். அவர்களோடு உரையாடும்போது, யார் எழுதியது என்பதே எனது முதற்கேள்வியாக இருக்கும். ஆனால் அப்படிக்கேட்பது... பிரதி எழுதியது யாரென்று அறிந்துகொண்டு உரையாடுவது கூட ஒருவித 'அரசியல்' என்பார்கள் அவர்கள். இவ்வாறான இடத்தில் 'மறத்தல்' என்பதில் அரசியல் இல்லையென்றே நினைக்கின்றேன். அப்படியான ஒரு கோணமும் இருக்கின்றதெனச் சுட்டிக்காட்டவே குறிப்பிடுகின்றேன். அவ்வளவே. நன்றி.

Anonymous said...

டி.சே. நான் உங்கள் பார்வையுடன் உடன்படாவிட்டாலும் காலச்சுவடு தொடர்டபான 'தீண்டாமையுடன்' கூடிய ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்க உங்களுக்கு உள்ள உரிமையை மதிக்கிறேன். அது உங்கள் சுய விருப்பு சார்ந்தது.

இரண்டாவது குறிப்பில் நீங்கள் சுட்டிக் காட்டிய கோணத்தை நான் மறுக்கவில்லை. எழுதியவர் யாரென்று பார்த்துவிட்டு அதற்கேற்றாற்போல் பதிலிடுவது, பின்னூட்டமிடுவது என்பதெல்லாம் மார்க்சியர்கள் அல்லவாதவர்கள் பின்நவீனத்துவவாதிகள், முன்நவீனத்துவவாதிகள் என்று எ ல்லோரிடமும் தாராளமாக இருப்பதை நானறிவேன். அந்த இடத்தில் யெர் முக்கியமில்லைத் தான். ஆனால் நான் குறிப்பிடுவது வேறு ரகம். எப்போதும் அதிகாரத்துடன் ஒட்டிக்கொண்டு நின்றுவிட்டு அதற்குச் சாமரம் வீசிவிட்டு பின்னர் அதே அதிகாரத்திற்கெதிராக நானே எப்போதும் குரலெழுப்பினேன் என்று முழக்கமிடுவது தான் சகிக்கவொண்ணாததாக இருக்கிறது. அதேவேளை அநியாயம் நேரும் போதே அதற்கெதிராகக் குரலெழுப்பிவிட்டு எந்தநேரமும் அதனுடன் முரண்பட்டுக் கொண்டு தமது வாழ்வைத் தொலைத்த மனிதர்களை நாம் மறந்து விடப் போகிறோமா என்பதே எனது கேள்வி. அவர்கள் எப்போதுமே பேரில்லாமல் தான் போவதா?

நிவேதா/Yalini said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி!

'இங்கேயெல்லாம் மார்க்ஸியம், etc. etc. வைச் சீண்டுவாரில்லை. அவற்றுக்கும் அப்பால் புதுப்புது கோட்பாடுகள் பல உருவாகிவிட்டன.. எம்மவர்தான் இன்னமும் அரை நூற்றாண்டு பின்னுக்கு நின்று அதையே வைத்து அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்' என ஐரோப்பிய நாடொன்றில் படித்துக்கொண்டிருக்கும் தோழியொருத்தி தொலைபேசியில் விசனத்துடன் சொல்லிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.. ம்ம்ம்..

//ஆனால் அருந்ததிராய் தன்னுடைய பார்வை பின்நவீனத்துவப் பார்வை என்று எங்கும் சொன்னதாகத் தெரியவில்லை.//

கீர்த்தனன்,
தங்களைப் பெண்ணிலைவாதிகளாக அடையாளப்படுத்திக்கொள்ளாத பெண் கவிஞர்கள் பலர் அவ்வாறு பார்க்கப்படுவது எந்தளவு நியாயப்படுத்தப்படுகிறதோ, அருந்ததி ரோயின் பின்நவீனத்துவப் பார்வையும் அதேயளவு நியாயமானதென்றே நினைக்கிறேன். அவர் தன்னையொரு பெண்ணிலைவாதியென சொல்லிக்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் - அதை அறிந்திராத ஒருவர் - மிக உறுதியான அதேசமயம் மூர்க்கமான பெண்ணிலைவாதச் சிந்தனையுடனேயே இப்பிரதியில் அவரது பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளமையை விளங்கிக் கொள்வதனையொத்ததுதான் இதுவும். அனைத்துக்கும் ஆசிரியரின் வாக்குமூலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா என்ன..

மறத்தலின் அரசியல் குறித்து மது குறிப்பிட்ட உதாரணங்கள் வெறுமனவே ஒரு கோணத்தில் அதனை நோக்குமொரு முறைதான். மறத்தல் அல்லது புறக்கணித்தலைப் பொறுத்தவரை டிசே கூறியதைப்போல - பல கோணங்கள் - உண்மையிலேயே நினைவுக்கு வராத சந்தர்ப்பங்களுமிருக்கலாம். தவிரவும், இன்னுமொரு வகையில் கூறுவதாயின் ஒரு பிரதியினுள் ஆழ்ந்து போவதற்கு.., மற்றும் யார் சொல்வது, எங்கிருந்து சொல்லப்பட்டது போன்ற தகவல்களை அறிந்துகொள்வதன் மூலம் எம்முள் தன்னிச்சையாக உருவாகிடும் முன்மதிப்பீடுகளைத் தவிர்த்து, சொல்லப்பட்ட விடயத்தில் மட்டும் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்கு இந்த 'மறத்தல்/ புறக்கணித்தல்' இன்றியமையாதது. ஆளையும், தோற்றுவாயினையும் (source) முன்னிறுத்தும்போது (உ+ம்: இன்னாரால் எழுதப்பட்டது, இன்ன பதிப்பகத்தால்/ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது..) பிரதிகளிடமிருந்து வெகு தொலைவு விலகிவிடுகிறோம்.

'மறத்தலின் அரசியல்' குறித்து உரையாடும்போதுதான் இந்த 'நினைவுபடுத்துகைகளின் அரசியல்' குறித்தும் கவனஞ்செலுத்த வேண்டியதாகிறது. பெயர்களை, தலைப்புகளை, புகழ்பெற்ற மேற்கோள்களை நினைவுபடுத்தி வைத்திருப்பதென்பது, எம்மை அறிவுஜீவிகளாக நிறுவிக் கொள்வதற்கான அத்தியாவசியமானதோர் நிபந்தனை. அதிகமாக ஒன்றும் அறிந்திராவிட்டாலும், நாலைந்து மேற்கோள்களும் பத்துப் பதினைந்து 'பெருந்தலை'களின் பெயர்களும் போடுவது (அவர்களது படைப்புக்களை வாசித்திருக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாமில்லை, ஆனால் நூல்களின் பெயர்களும், ஒன்றிரண்டு வசனங்களும் மனப்பாடமாயிருக்க வேண்டும்) விவாதங்களில் பங்குகொள்வதற்கான அடிப்படைத் தகுதி. (உண்மையாக அறிந்தே உரையாடுபவர்கள் மன்னிக்குக.. இருந்தாலும் விவாதமென்று வரும்போது விடயத்தைவிட பெயர்களும் மேற்கோள்களுமே முன்னிலைப்படுத்தப்படுவதையும், இறுதியில் அதிகம் பெயர் - பெயர்களின் அரசியல்?! - தெரிந்தவரே வாகை சூடிக்கொள்வதையும் இலகுவில் மறுத்துவிட முடியாது..)

//பிரதி எழுதியது யாரென்று அறிந்துகொண்டு உரையாடுவது கூட ஒருவித 'அரசியல்' என்பார்கள் அவர்கள். //

அதேதான்..

//ஆனால் எனக்குத் தெரிந்த நண்பர்களில் சிலர் -மறத்தலின் அரசியல் இல்லாமல்- எழுதியவர்களை மறந்து எழுதப்பட்ட விடயங்களை நினைவில் வைத்திருக்கின்றார்கள்.//

நேர்மையான வாசகராயிருப்பதற்கான அடிப்படைத் தகுதி இதுதான் போலும். விமர்சகர்களுக்கும் வாசகர்களுக்குமிடையிலான பிரிநிலைக்கோடாகவே இந்த 'நினைவுபடுத்தல் - மறத்தலை'ப் பார்க்க முடிகிறது என்னால்.

//ஒரு கெட்ட வார்த்தயைப்போல புள்ளி இடைவெளிகளால குறிக்கிற அளவுக்கு, பின்னவீனத்துவத்தால புண்பட்டுட்டீங்க போல..?//

வியாபகன்.., வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறீர்களோ.. எரிகிற நெருப்பில் பெற்றோல் ஊற்றுகிறீர்களோ...;-)

நன்றி, ரசிகன்.

Anonymous said...

// அவர்கள் எப்போதுமே பேரில்லாமல் தான் போவதா?
...////
????????????????
who s dis mathu?
uuhhhhhh
wot da hell?

Anonymous said...

மது, காலச்சுவடோடு 'தீண்டாமை' என்பதெல்லாம் பெரும் அர்த்தத்தைக்கொடுக்கக்கூடியவை; நான் அவ்வாறில்லை. எனினும் உங்களது வாசிப்பு அதுவாய் இருக்கும்பட்சத்தில் கேட்டுக்கொள்ளச்செய்கின்றேன். நன்றி.
/அதேவேளை அநியாயம் நேரும் போதே அதற்கெதிராகக் குரலெழுப்பிவிட்டு எந்தநேரமும் அதனுடன் முரண்பட்டுக் கொண்டு தமது வாழ்வைத் தொலைத்த மனிதர்களை நாம் மறந்து விடப் போகிறோமா என்பதே எனது கேள்வி. அவர்கள் எப்போதுமே பேரில்லாமல் தான் போவதா?/
நிச்சமாக அவர்களும் நினைவில் இருத்தப்படவேண்டியவர்களே. நண்பரொருவர் ஒரு மடலில் எழுதியதுதான் இதை வாசிக்கும்போது நினைவுக்கு வந்தது. 'நாம் இன்று விதந்தோத்தும் விடயங்கள் எல்லாம் நாளை வெறுமையில் ஆழ்த்தி முற்றாக விலகிப்போகவும் கூடும்' என்பதை விளங்கிக்கொள்கின்றபோது எவரெனினும் -எங்களுக்கான நம்பிக்கையின் எதிர்ப்புள்ளியில் இயங்குபவர்களாயினும்- அவர்களுக்குரிய இடம் கொடுக்கப்பட்டு அவர்களும் அடையாளப்படுத்தப்படவேண்டியவர்களே. மறுப்பெதுவும் இங்குமில்லை.
------------------------
/...விதப்புக்கும் மதிப்புக்குமுரிய பிரதியாளர்களான பிரேம்-ரமேஷ் உடைய 'பேச்சு மறுபேச்சு' தொகுப்பும் 'பின்னவீனத்துவம் நோக்கி' என்ற அடையாளப்படுத்தலோட தானே வந்துச்சுது? (அதுவொரு காலகட்டத்த இல்லாட்டி 'நிலவரத்த'ச் சுட்டுறதுக்கான பிரயோகம் என்று கருதுறது தகும் எண்டாலும் கூட கவன ஈர்ப்புக்கான ஒரு விளம்பர வாசகம் போலவும் இருக்கு).../
வியாபகன், அந்த நூல் பின்-நவீனத்துவம் குறித்த உரையாடல்களை உள்ளடக்கியபடியால் அப்படி வருவது தவறில்லையென நினைக்கின்றேன். எனினும் ரமேஷ்-பிரேமின் சில புதினங்களில் வரும் பின்னட்டை வாசகங்கள் பயமுறுத்துகின்றன என்பதையும் மறைத்து உரையாடவேண்டியதில்லை. நீங்கள் ரமேஷ்-பிரேம் பற்றிக் கூறும்போது ஒன்று நினைவுக்கு வருகின்றது. ந.முருகேசபாண்டியன், 'என் இலக்கிய நண்பர்கள்' தொகுப்பில் 'ரமேஷ்-பிரேம் அவர்களின் எழுத்துக்களோடு தனித்துப்போனவர்கள், அவர்களோடு உரையாடவதற்கு எவரும் நெருங்குவது குறைவு' என்றரீதியில் எழுதியிருப்பார் (பிரதிகளுக்கு அப்பால் படைப்பாளிகளோடு முகிழ்ந்த நட்புக்கள் பற்றி அருமையாக முருகேசபாண்டியன் அதில் எழுதியிருப்பார்; உயிர்மையிலும் தொடராக வந்தது). ஆனால் வலைபதிவுகளில் நானறிந்தவரை மூன்று எழுத்தாளர்களுக்குத்தான் நிறைய வாசகர்கள் இருக்கின்றார்களென நினைக்கின்றேன் (அல்லது அப்படி வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்). ஒன்று ஜெயமோகன், மற்றது ரமேஷ்-பிரேம்.

/'பின்னவீனத்துவம்: மாயைகளைக் கட்டவிழ்த்தல்' நூலுக்கு நுஃமான் எழுதின முகவுரையக் குறிப்பிடுறீங்க எண்டு நினைக்கிறன்... சரியா?/
இல்லை வியாபகன். நீங்கள் குறிப்பிடும் நூலை நான் இன்னும் வாசிக்கவில்லை. நான் குறிப்பிட்டவர் இப்படி எழுதியிருக்கின்றார்...

...இன்று இந்தியாவில் இப்படிப் பல மொழியில் பலர் உள்ள நிலையில், தமிழில் ரவிக்குமார் -அந்தோனிசாமி மார்க்சை குருவாகக் கொண்ட நிறப்பிரிகை குழு, எஸ், வி இராஜதுரையைக் கொண்ட குழு எனப் பலவாக பல உள்ளது. இதில் அ.மார்க்ஸ் - ரவிக்குமார் போன்றவர்கள் மிகத் தீவிரமாக மார்க்சியத்துக்கு எதிரான கோட்பாட்டுத் தளத்தை உருவாக்குவதில் இயங்குகின்றனர். ஒரு புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்துக்கு இருக்கக் கூடிய மக்கள் ஆதரவுடன் கூடிய ஒரு அமைப்பு வடிவங்கள் இந்தியாவில் உள்ளன. அவர்களால் ஒரு பெரிய நிதியைச் செலவழித்து தமது அரசியல் கருத்து தளத்தை விரிவு படுத்த முடியாத புரட்சிகர நிலை உள்ள போது, அ. மார்க்ஸ் போன்றோர் மிகப் பெரிய நிதி ஆதரவுடன் தொடர் வெளியீடுகளை தனிநபர்களாக வெளியிடும் மர்மத்தை காலம் தான் அம்பலப்படுத்தும்.

இவர்களின் ஐரோப்பிய பயணங்கள், ஏகாதிபத்திய கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்கள் என்பன உடனுக்குடன் இவர்களிடம் கிடைப்பதும், அதை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வெளியீடுகளை வெளியிடும் செயலின் மர்மமும், அதன் நிதிப்பலமும் மர்மமாகவே உள்ளன.

இங்கு (பிரான்ஸ்) கம்யூனியச எதிர்ப்பு கோட்பாடு தொலைக்காட்சியில் காட்டப்படவுடன் அல்லது வெளிவந்தவுடன், அதை சிறிது காலத்தில் அ.மார்க்ஸ் சார்ந்த கும்பல் தமிழில் எழுத்து வடிவம் கொடுக்கின்றனர். எதிர்காலத்தில் சர்வதேசமயமாகி உள்ள தொலைக்காட்சியில் இவர்கள் தோன்றி தமிழில் மார்க்சிய எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய நீண்ட காலம் செல்லாது என்பதை நாம் முன்கூட்டியே கூறிவைக்க விரும்புகின்றோம்.


மேலதிகமாய் வாசிக்க இங்கே செல்லலாம் (http://puthagapiriyan.blogspot.com/2007/05/blog-post_18.html). இது குறித்து விரிவாக உரையாட விரும்பவில்லை. எனெனில் இவ்வாறான உரையாடல்கள் எங்கே போய் முடியும் என்பது 'முடிந்த முடிவாய்'த் தெரிவதாலும், 'ஒரு பொல்லாப்புமில்லை'யென வாளாவிருத்தல் சாலவும் நன்றென நினைக்கின்றேன். ஒரேயொரு விடயத்தை மட்டும் சொல்லிவிடுகின்றேன், அ.மார்க்ஸ் என்ற பெயரை அந்தோணிசாமி மார்க்சாய் நீட்டியெதுவது கூட சாதிய மனோபாவந்தான் (ஏற்கனவே பல இடங்களில் இந்த நீட்டலின் அரசியல் குறித்து பேசப்பட்டுவிட்டாயிற்று).
மேலும் நிவேதா, தனது பதிவு 'எனது அரசியல்' களமாய் மாற்றப்படுவதை விரும்பார் என்பதாலும் உரையாடலை இப்போதைக்கு இத்தோடு முடித்துக்கொள்ளலாமென நினைக்கின்றேன். நன்றி.

ஜமாலன் said...

நண்பருக்கு,

தற்சமயம்தான் உங்கள் வலைப்பக்கத்தைப்பார்த்தேன். உங்கள் நாவல் அறிமுகம் மற்றும் கருத்துக்கள் அருமை. இந்த நீண்ட விவாதமும்.. பல செய்திகளை தமிழ் சூழல்குறித்து உணர்ந்து கொள்ள முடிந்தது.

பதிவுகளில் உங்கள் ஆழமான கருத்தாடல்கள் ஆறதல் அளிக்கிறது. பணி தொடர வாழ்த்துக்கள்.

மறதி, நினைவு இரண்டுமே அரசியல் சார்ந்த சொல்லாடல்கள்தான். இந்த விவாதம் அதனை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்படுவது புரிதலை அடுத்த தளத்திற்கு நகர்த்திச் செல்லும்.

பின்நவீனத்துவம் மார்க்சியத்திற்கு இடையிலான உரையாடல்கள் தொடரும் ஒன்று. அதனை ஆரோக்கியமான தளத்திற்கு நகர்த்திச் செல்ல இத்தகைய விவாதங்கள் உதவக்கூடும்.

நன்றி
அன்புடன்
ஜமாலன்.

Anonymous said...

\\ஆனால் வலைபதிவுகளில் நானறிந்தவரை மூன்று எழுத்தாளர்களுக்குத்தான் நிறைய வாசகர்கள் இருக்கின்றார்களென நினைக்கின்றேன் (அல்லது அப்படி வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்). ஒன்று ஜெயமோகன், மற்றது ரமேஷ்-பிரேம்.//

அதிகம் ரசிகர்களைக் கொண்டவர்கள் ரஜனியும், விஜயும் என்று சேர்த்து வாசித்துக் கொண்டால் அர்த்தம் இன்னமும் விரிவு பெறும்.

ஜமாலன் said...

//மேலும் நிவேதா, தனது பதிவு 'எனது அரசியல்' களமாய் மாற்றப்படுவதை விரும்பார் என்பதாலும் உரையாடலை இப்போதைக்கு இத்தோடு முடித்துக்கொள்ளலாமென நினைக்கின்றேன். நன்றி.//

டிசே கூறியிருப்பதைப்போல.. இவ்விவாதம் தனியான ஒரு தளத்தில் நடத்தப்படுவத இன்னும் பலரும் கலந்தகொள்ளவும் புரிந்து கொள்ளவும் ஏதுவாகும்.

-ஜமாலன்.

Ayyanar Viswanath said...

டிசே
வெகு நாள் கழித்து நல்ல உரையாடலைப் படிக்க முடிந்தது..நன்றி..(துவக்கப் புள்ளி நீங்களாக இருந்ததினால்)

இந்த வித்தியாசங்களின் அரசியல்தான் (அருந்ததி ராய்,அ.மார்க்ஸ்,எஸ்விஆர் புரிதல்கள்)பன்முகத் தன்மைக்கு அடித்தளம் போலும் மேலும் எல்லாருடைய அ விற்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது..

இங்காவது பரவாயில்லை மது போன்றோரின் உரையாடல்களில் புரிதலும் பிறிதொரு கோணமும் இன்னொரு துவக்கப் புள்ளிகளாக அமைகின்றன..ஆனால் அந்தப் பரப்பில் சில அறிவுஜீவிகள் திட்டவட்டமான முடிவுகளோடு வந்துவிடுவார்(பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை) அவர்களின் கூற்றுப்படி வலையில் இதுவரை பின்நவீனம் எவருக்கும் தெரியாது (எவனும் எழுதவில்லை)இங்கே அடையாளப்படும் சிலரும் அரைவேக்காடுகள் என மண்டையில் ஓங்கி அடித்துவிட்டுப் போகின்றனர்.எனவே வாயை திறக்கவே நிறைய முறை யோசிக்க வேண்டி இருக்கிறது.எங்காவது எதையாவது சொல்லப்போனால் உளறல் என நச் சென்று சொல்லிவிட்டுப் போவது இவர்களின் புத்திசாலித்தனமாய் இருக்கிறது..இருப்பினும் நமக்கானவை என்றும் நமக்கானவைதானே (எழுத்துக்களின் புரிதலினூடாய் நமக்கென்ற புரிதலை இங்கே பதிக்கிறேன்)

நிவேதா name of the rose dvd காணாமல் போனதிற்காக நீங்கள் மகிழத்தான் வேண்டும்

மது
காலச்சுவடை தலையில் வைத்து கொண்டாடியவர்களில் நானும் ஒருவன்.
சுகுணாவின் இரண்டு கட்டுரைகள் மற்றும் சில தொடர் விவாதங்கள் மூலம் பிறிதொரு பார்வையை உணர முடிந்தது.அரசியல் தவிர்த்து செறிவானவை விரவிக்கிடப்பதை மறுப்பதற்கில்லை.மறத்தலின் அரசியல் குறித்து கேள்வியெழுப்பி இருந்தீர்..ரசிக கண்மணிகளய் இருந்த காலகட்டங்களில் படைப்புகளை உள்வாங்கிகொள்ளும் மனோநிலை மட்டும்தான் எனக்கிருந்தது.. பாழாய் போன வலைக்கு வந்த பின்னர்தான் எழுதியது யார்? பின்புலம் என்ன? என்றெல்லாம் யோசிக்க தொடங்கினேன்..இப்போதெல்லாம் ஒரு படைப்பை அறியாமையின் சுவைகளோடு நெருங்கமுடிவதில்லை(என்னால் புலிநக கொன்றையை படிக்க முடியவில்லை)..இது ஒரு விதத்தில் நுண்ணரசியலை கட்டவிழ்த்தாலும் வாசிப்பின்பத்தை துறக்க நேரிடுகிறது. எனவே மறத்தலின் அரசியல் என நீங்கள் குறிப்பிடுவது அறியாமையின் அழகாகவும் இருக்கலாம்.

நிவேதா/Yalini said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி!

அய்யனார்,

படம் அவ்வளவு வாய்க்கவில்லையென்று கேள்விப்பட்டிருந்தேன். படத்தை முதலில் பார்க்கத் தயங்கியதும் அதனால்தான். ஆனால், Sean Connery ஐக் கொஞ்சம் பிடிக்கும் The First Knight பார்த்ததிலிருந்து..;-)

soorya said...

நண்பி,
உங்கள் கட்டுரை அருமையான படைப்பு.
எனக்கு அது தொடர்பாகவந்த பின்னூட்டங்கள் பிடிக்கவில்லை.
தமதிருப்பை நிலைநாட்டும் தம்பட்டங்கள்.
ஒகே. நமக்கேன் வம்பு.
நீங்கள் படையுங்கள்..வாசிக்கக் காத்திருக்கிறேன்.

நிவேதா/Yalini said...

நன்றி, சூர்யா!

சமயங்களில் இத்தகைய உரையாடல்களும் விவாதங்களும் அவசியமாகக்கூட இருக்கலாம், இன்னமும் தெளிவாக விடயங்களை விளங்கிக்கொள்ள.. ஆகக்குறைந்தது - நாம் எங்கே நிற்கிறோமென - எமது நிலையை அறிந்துகொள்ளவாவது..

soorya said...

இதுகளைக்கையெல்லாம் சிக்குப்பட்டு..
ஒரு நல்ல படைப்பாளியை எமது தேசம் இழந்துவிடக்கூடாதே என்ற ஆதங்கமேயொழிய வேறொன்றறிந்திலேன்..பாரபரமே, என்பதுதான் இப்போதைக்கு நான் உணர்வது.

Anonymous said...

அய்யனார்,

நான் நான் குறிப்பிட்டது அவரவர்களுக்கான வகிபாகத்தை ஏற்றுக் கொள்ளலே தவிர தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதல்ல.
சுகுணா திவாகரின் இரண்டு கட்டுரைகளின் இணைப்புக்களையும் தருவீர்களா?

நிவேதா/Yalini said...

//இதுகளைக்கையெல்லாம் சிக்குப்பட்டு..
ஒரு நல்ல படைப்பாளியை எமது தேசம் இழந்துவிடக்கூடாதே//

:-(.. புரியவில்லை.. ஆரோக்கியமான விவாதங்களுக்கும் ஒரு 'நல்ல படைப்பாளியை(?!)' இழப்பதற்குமிடையே என்ன தொடர்போ?

எது எப்படியிருப்பினும், நன்றி!

Anonymous said...

தருண்யன் எழுதுவது,

தாமதமாகவே உங்கள் வலைப்பதிவைப் பார்த்து தாமதமாகவே இதை எழுதுகிறேன் போலிருக்கிறது. வலைப்பதிவுத் தர்மநியாயங்கள் அறியேன். பதிவுகள், பின்னூட்டங்கள் என்று துணுக்குத் துணுக்காக கருத்துக்களை உதிர்க்கும் இதன் வாலாயங்களையும் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லைத்தான்! ஒருவேளை நன்றியுரை முடித்துக் கலையும் நேரத்தில் கேள்வி கேட்க எழுந்துநிற்கிறேன் என்றால் எல்லோரும் என்னை மன்னியுங்கள்.

பலர் கூடித் தீவிரமான விஷயங்களை கலந்து பேசி விவாதிப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும், நேரடிப் பேச்சில் உரையாடலில் உருவாகி வரக்கூடிய விளைவும் புரிதலும் தவறவிடப்பட்டுச் செல்வதாகவே தோன்றுகிறது. இருக்கலாம்... இதுதான் வலையுரையாடலின் இயலுமையும் தர்மமுமாயிருக்கலாம்.

என்னதான் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றிருந்தாலும், பேச்சு எழுத்தாகும்போது உருவாகும் தடைகளும் தணிக்கைகளும் Online அவசரமும் காரணமாய், அள்ளித்தெளித்த கோலமாகவே கருத்துப்பகிர்வுகளும் அமைகின்றன.
“வலை தர்மம்” தெரியாதவனின் அங்கலாய்ப்பாக அதை விட்டுவிடலாம்.
ஆனால்-
மது எழுப்பியிருக்கும் பிரச்சினையில் எல்லோரும் ஜகா வாங்குவதற்கு, அவசரம்தான் காரணமா? “எனது அரசியல் களமாய் மாற்றப்படுவதை நிவேதா விரும்ப மாட்டார்” என்று கூறி டி.சே. நிறுத்திக்கொள்கிறார். ஜமாலனும் (‘மொழியும் நிலமும்’ தந்த அதே ஜமாலனா, வேறு யாருமா?) “வேறொரு தளத்தில் போய் இதுபற்றிப் பேசலாம்” என்று வேறெங்கோ இழுக்கிறார்.
ஆக, அவசியம் பேசவேண்டிய விஷயம்தான், ஆனால் இங்கு வேண்டாம் என்பதற்கு என்ன காரணம்? உங்களது வலைப்பதிவு இடத்திற்குரிய நாகரிக எல்லை பற்றி அவர்களிருவரும் தரும் Statement ஐ அப்படியே எடுத்துக்கொள்வதா?

உலகறிந்த அரசியல், சமூக செயற்பாட்டாளரான அருந்ததி ரோயின் நாவல் பற்றி, (மாக்ஸியத்துக்கு அப்பால் உருவாகிவிட்ட புதுப்புது கோட்பாடுகள் பற்றியெல்லாம் பேசும் தோழியைக் கொண்டிருக்கும்) நிவேதா எழுதிய குறிப்புகள் தொடர்பாய் வருகின்ற பின்னூட்டங்களில் அரசியல் வேண்டாம் என்ற நாசூக்கு ஏன் உருவாக்கப்படுகிறது?
‘பெண்கள் அரசியலை விரும்பார். அவர்களது இடத்தில் இலக்கியத்தோடு நிறுத்திக் கொள்ளலாம். அரசியலைப் பேச வேறு இடத்துக்குப் போகலாம்’ என்பதுதானா?
என்றால்....
அரசியல் பேச ஆண்களின் வலைமனைகளைத் தேடிச் செல்ல வேண்டும் என்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மது குறிப்பிடுவதை, அரசியல் என்பதைவிட மனித இயல்பிலொன்றைத் தொட்டுக் காட்டுவதாகவே நான் எடுத்துக்கொண்டேன். என் மிகக் குறுகிய பழக்க அனுபவத்தில் பல திருவுருக்கள் உடன் நினைவில் தோன்றினார்கள். அசட்டுக் களையுடன், மனிதாபிமான, மக்கள் விடுதலைக் கொடிகளை முன்நீட்டிக் காட்டியபடியான முகங்கள்!

“எப்போதும் அதிகாரத்துடன் ஒட்டிக்கொண்டு நின்றுவிட்டு அதற்குச் சாமரம் வீசிவிட்டு பின்னர் அதே அதிகாரத்திற்கெதிராக நானே எப்போதும் குரலெழுப்பினேன் என்று முழக்கமிடுவது தான் சகிக்கவொண்ணாததாக இருக்கிறது. அதேவேளை அநியாயம் நேரும் போதே அதற்கெதிராகக் குரலெழுப்பிவிட்டு எந்தநேரமும் அதனுடன் முரண்பட்டுக் கொண்டு தமது வாழ்வைத் தொலைத்த மனிதர்களை நாம் மறந்து விடப் போகிறோமா என்பதே எனது கேள்வி. அவர்கள் எப்போதுமே பேரில்லாமல் தான் போவதா?”
என்று கேட்கிறார் மது.
இதை எதிர்கொள்வதில் என்ன தயக்கம் என்பதையாவது கோடிகாட்டுங்களேன்!
அன்புடன்
தருண்யன்

நிவேதா/Yalini said...

தருண்யன்,
டிசேயோ, ஜமாலனோ இப்பதிவில் உரையாடல் தொடர்வதைத் தவிர்க்க முனைந்தமைக்குக் காரணம் , நிச்சயம் நீங்கள் குறிப்பிட்டதல்லவென்று நினைக்கிறேன். பதிவையும் , அதனைத் தொடர்ந்த பின்னூட்டங்களையும் மறுபடியுமொருமுறை நிதானமாக வாசித்துப் பாருங்களென்று மட்டும்தான் சொல்ல முடிகிறது.

// மாக்ஸியத்துக்கு அப்பால் உருவாகிவிட்ட புதுப்புது கோட்பாடுகள் பற்றியெல்லாம் பேசும் தோழியைக் கொண்டிருக்கும் ) நிவேதா //

இந்த எள்ளலினூடாய் என்னத்தைக் குறிப்பிட விரும்புகிறீர்களென்பது புரியாமலில்லை . பெண்கள் அரசியல் பேசுவது பற்றியும் , டிசேயும் ஜமாலனும் வேறிடத்தில் அரசியலைப் பேசலாமெனக் கூறியதைப் பற்றியும் நீங்கள் அலட்டிக்கொள்வதை வெறும் முதலைக் கண்ணீராக மட்டுமே எடுத்துக்கொள்ள முடிகிறது. மதுவின் கேள்வியை பின்னூட்டங்களில் எவரேனும் மறுத்திருந்தார்களா என்ன ? அதே கேள்விக்கு டிசேயின் பதில் :

// நிச்சயமாக அவர்களும் நினைவில் இருத்தப்படவேண்டியவர்களே . நண்பரொருவர் ஒரு மடலில் எழுதியதுதான் இதை வாசிக்கும்போது நினைவுக்கு வந்தது . ' நாம் இன்று விதந்தோத்தும் விடயங்கள் எல்லாம் நாளை வெறுமையில் ஆழ்த்தி முற்றாக விலகிப்போகவும் கூடும் ' என்பதை விளங்கிக்கொள்கின்றபோது எவரெனினும் - எங்களுக்கான நம்பிக்கையின் எதிர்ப்புள்ளியில் இயங்குபவர்களாயினும் - அவர்களுக்குரிய இடம் கொடுக்கப்பட்டு அவர்களும் அடையாளப்படுத்தப்படவேண்டியவர்களே . மறுப்பெதுவும் இங்குமில்லை .//

பின்னூட்டங்களை அவசர அவசரமாக குருட்டாம்போக்கில் வாசித்துவிட்டு நீங்களும் பதட்டமடைவதைத் தயவுசெய்து தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

tharunyan said...

எண்ணியதை எண்ணீயபடி வார்த்தைகளில் சேர்த்துவிட முடியாத என் தோல்வி, பதிலுக்கு நான் திணறித் திகைப்புற்றுச் சோரும்படியான வார்த்தைகளைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
எள்ளல் நிச்சயமாய் என் நோக்கமில்லை.
நான் எதையோ நினைத்துக் கொண்டு என்னமோ ஆதங்கத்தை எழுதப்போக,
அது... எள்ளல், அலட்டல், முதலைக் கண்ணீர், குருட்டாம்போக்கு, நிதானமின்மை, பதட்டம் என்பதையெல்லாம் கொண்டதாக ஆகியிருக்கிறது.
ஆயின்.... என்னை மன்னித்துவிடுங்கள், ஒதுங்கிவிடுகிறேன்.
அன்புடன்,
தருண்யன்